For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

5 மணி நேரத்தில் 65 மைல்கள்.. புற்றுநோய் கழகத்திற்கு நிதி திரட்டுவதற்காக ஒரு பைக்கத்தான்!

Google Oneindia Tamil News

வாரிங்டன், பென்சில்வேனியா: அமெரிக்காவின் பிலடெல்பியா மாகாணத்தில் உள்ள வாரிங்டன் நகரில் அமெரிக்க புற்றுநோய் கழகம் நிதி திரட்டுவதற்காக நடத்திய பைக்கத்தான் எனப்படும் சைக்ளிங் போட்டியில் பெருமளவிலானோர் திரண்டு வந்து கலந்து கொண்டனர்.

பைக்கத்தான் என்று பெயரிடப்பட்ட இதில் 100 மைல், 65 மைல், 32 மைல், 19 மைல் என நான்கு விதமான தூரத்திற்குப் போட்டிகள் நடத்தப்பட்டன.

Bike-a-thon for the cancer Awareness

மொத்தம் 211 குழுக்கள் இதில் கலந்து கொண்டன. இந்த நிகழ்ச்சியின் மூலமாக கிட்டத்தட்ட 1.257 மில்லியன் டாலர் நிதி சேகரிக்கப்பட்டது. இது புற்று நோய் நோயாளிகளுக்காக பயன்படுத்தப்படும். இந்த நிகழ்ச்சியில் நமது வாசகர் அழகர் ராஜாவும் கலந்து கொண்டார்.

இதுகுறித்து அவர் கூறஉகையில், 65 மைல் பிரிவில் நான் பங்கேற்றேன். 5 மணி நேரத்தில் இதைக் கடந்தேன். பெஞ்சமின் பிராங்க்ளின் பாலத்திலிருந்து நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள அட்லாண்டிக் சிட்டியின் போர்ட் வால் ஹால் வரை போட்டி நடந்தது.

கடைசி 4 மைல் தூரத்திற்கு சிரமமாக இருந்தது. இருப்பினும் சமாளித்து விட்டேன். எனது குடும்பத்தினர் எனக்கு பெரும் ஆதரவாக இருந்தனர். பயிற்சியின்போது உறுதுணையாக இருந்து ஊக்குவித்தனர். போட்டி ஆரம்பித்த இடத்திலும், முடியும் இடத்திலும் நின்று உற்சாகமளித்தனர்.

எனது மனைவி சியாமளா, மகள் ஆராதனா, மகன் அஜய், எனது நண்பர் பாலாஜி ஆகியோருக்கு நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் அழகர் ராஜா.

செய்தி + படம்: அழகர் ராஜா, வாரிங்டன், பென்சில்வேனியா

English summary
ACS ( American Cancer Society) Organized Bike-a-thon event to raise fund for cancer awareness and support cancer survivors in Warrington, Pennsylvania. Our reader Alagar Raja participatd in this event and shared his experience.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X