For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மக்கள் கோபத்துக்கு ஆளான பெண் மேயர்.. தலை முடியைப் பிடித்து இழுத்துச் சென்று ஆவேசம்!

Google Oneindia Tamil News

லா பாஸ் : பொலிவியாவில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவரும் எதிர்கட்சி ஆதரவாளர்கள், போராட்டத்தை கலைக்க முயன்ற பெண் மேயரை, வலுக்கட்டாயமாக வீதிகளில் இழுத்து சென்று அவரது தலைமுடியை வெட்டி அராஜகத்தில் ஈடுபட்டனர்.

அங்கு கடந்த 20ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்ற நிலையில், அதிபர் ஈவோ மோரல்ஸ் தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டதாக எதிர்கட்சியினர் குற்றம் சாட்டி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் எதிர்கட்சியை சேர்ந்த இருவர் கொல்லப்பட்டதாக கூறப்படும் நிலையில், இந்தக் கொலைக்கு காரணமானதாக கருதப்படும் பெண் மேயர் பாட்ரிசியா ஆர்சின் தலைமுடியை வலுக்கட்டாயமாக வெட்டிய போராட்டக்காரர்கள், அவரை ராஜினாமா கடிதத்தில் கையெழுத்திடவும் வலியுறுத்தினர்.

கடைசி வரை இழுபறி.. மகாராஷ்டிராவில் அடுத்து என்ன.. ஆளுநரிடம் எஞ்சியிருப்பது 4 ஆப்ஷன்கடைசி வரை இழுபறி.. மகாராஷ்டிராவில் அடுத்து என்ன.. ஆளுநரிடம் எஞ்சியிருப்பது 4 ஆப்ஷன்

தேர்தல் முறைகேடு குற்றச்சாட்டு

தேர்தல் முறைகேடு குற்றச்சாட்டு

பொலிவியாவில் கடந்த மாதம் 20ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்ற நிலையில், அங்கு அதிபர் ஈவோ மோரல்ஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும்பொருட்டு தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டதாக எதிர்கட்சியினர் குற்றம் சாட்டி போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

எதிர்கட்சியினர் குற்றச்சாட்டு

எதிர்கட்சியினர் குற்றச்சாட்டு

கடந்த 20ம் தேதிமுதல் எதிர்கட்சி ஆதரவாளர்கள் அதிபர் ஈவோ மோரல்ஸ்க்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், போராட்டக்காரர்கள் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வலுக்கும் போராட்டம்

வலுக்கும் போராட்டம்

மத்திய பொலிவியாவின் கோச்சாபாம்பா மாகாணத்தில் உள்ள விண்டோ என்ற சிறிய நகரில் பாலம் ஒன்றை முடக்கி ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நாட்டின் பல இடங்களிலும் போராட்டங்கள் வலுப்பெற்று வருகிறது.

வலுக்கட்டாயமாக முடி கட்

வலுக்கட்டாயமாக முடி கட்

போராட்டத்தை முறியடிக்கும் விதமாக அங்கிருந்த தடைகளை அகற்றும் முயற்சியில் பெண் மேயர் பாட்ரிசியா ஈடுபட்டதாகவும், மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களின் கொலைக்கு காரணமாக இருந்ததாகவும் கூறி, அவரை தரதரவென சாலைகளில் இழுத்துச் சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் அவரது தலைமுடியை வலுக்கட்டாயமாக வெட்டினர்.

ராஜினாமா செய்ய வலியுறுத்தல்

ராஜினாமா செய்ய வலியுறுத்தல்

மேயர்மீது வண்ண சாயங்களை ஊற்றிய போராட்டக்காரர்கள், அவரை கொலைகாரி என்று குற்றம்சாட்டி முழக்கங்களை செய்தனர். தொடர்ந்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தில் கையெழுத்திடவும் கட்டாயப்படுத்தினர்.

போலீஸ் உதவி

போலீஸ் உதவி

இதையடுத்து அங்குவந்த போலீசார், பாட்ரீசியாவை அவர்களிடம் இருந்து மீட்டு, அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

தேர்தல் தில்லுமுல்லு என குற்றச்சாட்டு

தேர்தல் தில்லுமுல்லு என குற்றச்சாட்டு

கடந்த 20ம் தேதி அங்கு அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கையை 24 மணிநேரத்தில் அதிபர் ஈவோ மோரல்ஸ் நிறுத்தி வைத்தார். இதையடுத்து அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மீண்டும் அதிபராக அவர் முயற்சிப்பதாக எதிர்கட்சி ஆதரவாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அதிபர் மோரல்ஸ் கடந்த 2006 முதல் அங்கு அதிபராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
Bolivea's Lady Mayor forcibly assaulted by Protesters
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X