For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'கடவுளின் அணுத்துகள்' ஆய்வுக்காக பீட்டர் ஹிக்ஸ், பிரான்காய்ஸ் எங்லர்ட்டுக்கு இயற்பியலுக்கான நோபல்

By Siva
Google Oneindia Tamil News

Britain's Peter Higgs, Belgium's Francois Englert win 2013 physics Nobel prize
ஸ்டாக்ஹோம்: இயற்பியலுக்கான நோபல் பரிசு ஹிக்ஸ் போசான் கொள்கை ஆராய்ச்சிக்காக இங்கிலாந்தைச் சேர்ந்த பீட்டர் ஹிக்ஸ் மற்றும் பெல்ஜியத்தின் பிரான்காய்ஸ் எங்லர்ட் ஆகியோருக்கு கிடைத்துள்ளது.

ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நேற்று முதல் நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. நேற்று மருத்துவத்திற்கான பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த ஜேம்ஸ் ரோத்மேன், ரான்டி ஸ்கேமேன் மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த தாமஸ் சுதோஃப் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில் இன்று இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இந்த பரிசை ஹிக்ஸ் போசான் கொள்கை ஆராய்ச்சிக்காக இங்கிலாந்தைச் சேர்ந்த பீட்டர் ஹிக்ஸ் மற்றும் பெல்ஜியத்தை சேர்ந்த பிரான்காய்ஸ் எங்லர்ட் ஆகியோர் பெற்றனர்.

போசான் துகள்கள் இருப்பதை கணித்துக் கூறியவர் ஹிக்ஸ். பிரபஞ்சத்தின் அடிப்படை மூலக்கூறுகளுக்கு எடை உள்ளதற்கு போசான் துகள்களே காரணம் என்பதையும் அவர் விளக்கிக் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்திகள்

ஹிக்ஸ் போஸான்.. 'கடவுளை' 99.999% கண்டுபிடித்து விட்டார்கள்!ஹிக்ஸ் போஸான்.. 'கடவுளை' 99.999% கண்டுபிடித்து விட்டார்கள்!

English summary
Britisher Peter Higgs and Belgium's Francois Englert have won the 2013 Nobel prize for physics for predicting the existence of the Higgs boson - the particle key to explaining why elementary matter has mass.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X