தொடங்கியது கனடா தேர்தல்! ட்ரூடோவுக்கு பிறகும் லிபரல் கட்சியால் வெல்ல முடியுமா! களம் யாருக்கு சாதகம்?
ஒட்டாவா: கனடாவில் ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமாவைத் தொடர்ந்து புதிய பிரதமராகப் பதவியேற்ற மார்க் கார்னி அங்குத் தேர்தலை அறிவித்திருந்தார். அதன்படி அங்கு இப்போது வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. கனடா மக்கள் ஆர்வமாக வந்து வாக்களித்து வருகிறார்கள். இந்திய நேரப்படி நாளை காலை 7 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும். அது முடிந்த உடனேயே வாக்கு எண்ணிக்கை தொடங்கிவிடும்.
கனடாவில் கடந்த சில காலமாகவே அரசியல் சூழல் நார்மலாக இல்லை. அங்குப் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் பதவி விலகினார். இதையடுத்து அவரது லிபரல் கட்சியில் இருந்து மார்க் கார்னி என்பவர் பிரதமராகப் பதவியேற்றார்.

கனடா தேர்தல்
கனடாவைப் பொறுத்தவரை அங்கு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதன்படி பார்த்தோம் என்றால் வரும் அக்டோபர் மாதம் தான் அங்குத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இருப்பினும், புதிய அரசை அமைத்த மார்க் கார்னி மக்களைச் சந்திக்க முடிவு செய்தார். நாடாளுமன்றத்தைக் கலைத்து அவர் தேர்தலை அறிவித்தார். இதன் காரணமாகவே இப்போது ஏப்ரல் 28ம் தேதி அங்குத் தேர்தல் நடைபெறுகிறது.
கனடாவைப் பொறுத்தவரை அங்கு மொத்தம் 2.8 கோடி வாக்காளர்கள் உள்ளனர். உலகின் மிகப் பெரிய நாடுகளில் ஒன்றாக இருந்தாலும் அங்கு மக்கள் தொகை மிக மிக குறைவு. இதற்குக் காரணம் கனடாவின் புவியியல் சூழல் தான். கனடாவில் பெரும் பகுதியில் பனியும் அதீதக் குளிரும் இருக்கும். இதனால் அமெரிக்க எல்லைக்கு அருகே தான் பெரும்பாலான மக்கள் தொகை இருக்கும். மற்ற இடங்களில் மக்கள் வசிக்க மாட்டார்கள். இதனாலேயே பெரிய நாடாக இருந்தாலும் அங்கு மக்கள் தொகை குறைவாக இருக்கிறது.
எத்தனை தொகுதிகள்
அங்குள்ள 2.8 கோடி மக்கள் இணைந்து 343 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்வார்கள். கனடாவில் மக்கள்தொகை சூழலுக்கு ஏற்ப தொகுதிகளின் எண்ணிக்கை மாற்றி அமைக்கப்படும். அதன்படி கடந்த தேர்தலுடன் ஒப்பிடும்போது 5 தொகுதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கடந்த தேர்தலில் 338இல் இருந்த தொகுதிகள் எண்ணிக்கை இந்த முறை 343 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
தேர்தல் எப்படி நடைபெறும்
வளர்ந்த நாடாகவும் G7இல் உறுப்பினராகவும் இருந்தபோதிலும், அமெரிக்காவைப் போலவே கனடாவிலும் இன்னும் வாக்குச் சீட்டு முறையிலேயே தேர்தல் நடைபெறுகிறது. இந்தியாவைப் போல அங்கு வாக்குப்பதிவு கருவிகள் பயன்படுத்தப்படுவது இல்லை. இதனால் வாக்குப்பதிவு முடிந்து தேர்தல் முடிவுகள் வரச் சில நாட்கள் வரை கூட ஆகலாம்.
நமது நாட்டில் எப்படித் தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்துகிறதோ.. அதேபோல கனடாவில் எலக்ஷன் கனடா என்ற அமைப்பு தான் தேர்தலை நடத்துகிறது. இது கனடாவில் உள்ள ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பாகும். வாக்குச் சீட்டுகள் முதல் வாக்கு எண்ணிக்கை வரை அனைத்தையும் இந்த அமைப்பே கண்காணிக்கிறது..
வாக்கு எண்ணிக்கை எப்போது
கனடாவைப் பொறுத்தவரை அங்கு மொத்தம் ஆறு டைம் ஜோன்கள் உள்ளன. கிட்டதட்ட மூன்று மணி நேரம் வரை மாறுபட்டு இருக்கும். பெரும்பாலான மாகாணங்களில் காலை 8.30 முதல் இரவு 8.30 மணி வரை தேர்தல் நடக்கிறது. அதாவது இந்திய நேரப்படி இன்று மாலை தொடங்கி நாளை அதிகாலை வரை தேர்தல் நடக்கும். வாக்குப்பதிவு முடிந்த உடனேயே வாக்கு எண்ணிக்கை தொடங்கிவிடும். இதனால் வாக்குப்பதிவு முடிந்த 30 நிமிடங்களில் யார் முன்னிலை என்பது குறித்த முதற்கட்டத் தகவல்கள் தெரிய வரும்.
யாருக்குச் சாதகம்
ஜஸ்டின் ட்ரூடோ இருந்த வரை அங்கு மக்களுக்கு லிபரல் கட்சி மீது அதிருப்தி இருந்தது. எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சிக்கு ஆதரவு அதிகமாகவே இருந்தது. ஆனால் மார்க் கார்னி பிரதமராகப் பதவியேற்றவுடன் அங்குக் குறிப்பிட்ட சதவிகிதம் பேர் லிபரல் கட்சி ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தனர். இதனால் அங்கு போட்டி கடுமையாக மாறியுள்ளது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications