For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கனடா தேர்தல்.. பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 3வது முறையாக வரலாற்று வெற்றி.. ஆனால் நிறைவேறாமல் போன ஆசை

Google Oneindia Tamil News

ஒட்டாவா: கனடாவில் நேற்று நடந்து முடிந்த பொதுத்தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன. பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது. அதேநேரம் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இடங்களில் வெல்லவில்லை. மொத்தம் 156 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் மெஜாரிட்டி கிடைக்கவில்லை.

கனடாவில் வழக்கமாக 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை பொதுத்தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். கடந்த 2019 நடைபெற்ற தேர்தலில் எந்தக் கட்சிக்குத் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.

ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதனால் தான் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டின் பிரதமராக தொடர்ந்தார்.

இவ்வளவு வன்மமா?.. கோலியின் சூசக பேச்சு.. ஒரு தமிழரை இன்னொரு தமிழருக்காக எதிராக முன்னிறுத்த திட்டம்?இவ்வளவு வன்மமா?.. கோலியின் சூசக பேச்சு.. ஒரு தமிழரை இன்னொரு தமிழருக்காக எதிராக முன்னிறுத்த திட்டம்?

மக்கள் செல்வாக்கு

மக்கள் செல்வாக்கு

இருப்பினும், பெரும்பான்மை இல்லாமல் ஆட்சியை நடத்துவது என்பது ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கத்திமேல் நடப்பதாக இருந்ததுஅதேநேரம் முன்பு இருந்ததை போல ஜஸ்டின் ட்ரூடோவுக்கு முழு மக்கள் செல்வாக்கு இல்லை. எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யாமல் போனதாலும், சில ஊழல் புகார்களும் அவரது இமேஜை நிறைய டேமேஜ் செய்து இருந்தார்கள். இதனால் தான் அவரால் கடந்த முறை நடந்த தேர்தலில் தனிப்பெரும்பான்மைக்குத் தேவையான இடங்கள் கிடைக்கவில்லை.

கனடா நாடாளுமன்றம் கலைப்பு

கனடா நாடாளுமன்றம் கலைப்பு

அதேநேரம் உலகையே புரட்டிப் போட்டு கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு நல்ல பெயரையே பெற்றுத் தந்துள்ளது. கடந்த 1.5 ஆண்டுகளாகக் கனடாவில் 15 லட்சம் பேருக்கு மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல 27 ஆயிரம் பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். எனவே இதை அப்படியே வாக்குகளாக மாற்ற வேண்டும் என்பதே ஜஸ்டின் ட்ரூடோவின் எண்ணமாக இருந்தது. இதனால் தான் முன்கூட்டியே தேர்தலை எதிர்கொள்ள அவர் தயாரானார். அதன்படி கனடா நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, செப். 20ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. . கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி அந்நாட்டின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.

ஜஸ்டின் ட்ரூடோ

ஜஸ்டின் ட்ரூடோ

இதில் ஆளும் லிபரல் கட்சி சார்பில் ஜஸ்டின் ட்ரூடோ, கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் எரின் ஓ டூல் களமிறங்கினர். சர்வதேச அளவில் பிரபலமான தலைவர்களில் ஒருவராக அறியப்படும் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு இந்த முறை நிலைமை சாதகமாக இல்லை என்றே கருத்துக்கணிப்புகள் கூறப்பட்டன. மேலும் இருவருக்கும் கடும் போட்டி இருப்பதாகவே தகவல் வந்தது.

மீண்டும் வெற்றி

மீண்டும் வெற்றி

இந்நிலையில் கனடா பொதுதேர்தல் நேற்று முடிந்த நிலையில், உடனே முடிவுகள் வெளியாகின. பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தேர்தலில் மூன்றாவது முறையாக வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளார். ஆனால் அவர் என்ன நோக்கத்திற்காக தேர்தலை முன்கூட்டியே நடத்தினாரோ அதற்கான வாய்ப்பு குறைவு, நாடாளுமுன்ற பெரும்பான்மையை மீண்டும் பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்காமல் போனது. கனடாவில் உள்ள சிடிவி நியூஸ் மற்றும் கனேடிய பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷன் இணைந்து நடத்திய கணிப்பின்படி, ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான ஆளும் லிபரல் கட்சி பல இடங்களை வென்று சிறுபான்மை அரசாங்கத்தை உருவாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடா தேர்தல் முடிவுகள்

கனடா தேர்தல் முடிவுகள்

இதனிடையே லிபரல் கட்சியினருக்கு 32.9% ஆதரவும், கன்சர்வேடிவ் கட்சிக்கு 34% ஆதரவும் கிடைத்துள்ளது. லிபரல் கட்சி எனினும் 156 இடங்களிலும், கன்சர்வேடிவ் கட்சி 121 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. bq கட்சி 32 இடங்களிலும், ndp f;lpr 28 இடங்களிலும் grn கட்சி 2 இடங்களிலும் முன்னிலையுல் உள்ளது மொத்தம் மெஜாரிட்டி பெற 170 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்கிற நிலையில் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான ஆளும் லிபரல் கட்சி 156 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. இதன் காரணமாக சிறுபான்மை அரசின் பிரதமராகவே அடுத்த 4 ஆண்டுகள் தொடரப்போகிறார் ஜஸ்டின் ட்ரூடோ. எனினும் அதிகாரப்பூர்வமாக முழு முடிவு வெளியான பின்னரே இதை உறுதி செய்ய முடியும்.

English summary
Justin Trudeau’s Liberals win third term but fall short of securing majority. Trudeau’s Liberal Party was elected or leading in 155 of the 338 seats in the House of Commons, compared with 123 seats for the Conservatives under Erin O’Toole.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X