இலங்கை மனித உரிமைகள் நிலை: காமன்வெல்த் நாடுகளுக்கான நிதியை நிறுத்தியது கனடா!

Subscribe to Oneindia Tamil

கனடா: இலங்கை மனித உரிமை நிலைமைகளின் காரணமாக காமன்வெல்த் நாடுகள் அமைப்பிற்கான நிதி உதவியை கனடா தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றச் செயல்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டுமென கனடா வலியுறுத்தியிருந்தது.

இலங்கையில் இடம்பெற்ற போர் தொடர்பிலான பெரிய குற்றச்சாட்டுகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும், இது குறித்து கனடா அக்கறை கொண்டுள்ளதாகவும் அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜொன் பயார்ட் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் காமன்வெல்த் நாடுகள் அமைப்பிற்காக கனடா ஆண்டு தோறும் 10 மில்லியன் டாலர்களை வழங்கி வருகிறது. எனினும், இலங்கை மனித உரிமை நிலைமைகளின் காரணமாக இந்த நிதி உதவியை தற்காலிகமாக கனடா நிறுத்தியுள்ளது.

சிறுவர்கள் திருமணங்களை நிறுத்தவும், அது தொடர்பாக தெளிவுபடுத்தவும் இந்த நிதி ஒதுக்கீடு பயன்படுத்தப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+