மகா காளி உடை, கையில் சிலுவை.. அடுத்து செய்த மோசமான காரியம்.. சர்ச்சையை கிளப்பிய ராப் பாடகர் யாஸ்மின்
ஒட்டாவா: கனடா நாட்டை சேர்ந்த டாமி ஜெனிசிஸ் எனப்படும் ராப் பாடகி இப்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார். இந்துக்களின் புனித கடவுளான மகா காளியை போல பேக் அப் அணிந்து அவர், கிறிஸ்தவர்களின் சிலுவையை வைத்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோ இரு மதங்களையும் புண்படுத்தும் வகையில் இருப்பதாகச் சொல்லி, பலரும் விமர்சித்து வருகிறார்கள்.
பிரபல கனடா நாட்டு ராப் பாடகரும், மாடல் அழகியுமான ஜெனிசிஸ் யாஸ்மின் மோகன்ராஜ் இப்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார். டாமி ஜெனிசிஸ் என அறியப்படும் இவர் சமீபத்தில் "ட்ரூ ப்ளூ" என்ற பாடலை வெளியிட்டிருந்தார். இந்த பாடலில் அவர் இந்து கடவுளான காளியைப் போன்ற தோற்றத்தில் தோன்றியதே சர்ச்சையைக் கிளப்பியிருந்தது.

என்ன நடந்தது?
அந்த வீடியோவில் மகா காளியைப் போலத் தோற்றமளிக்க உடலில் நீல நிற வர்ணத்தைப் பூசியிருக்கிறார். மேலும், சிவப்பு நிற பொட்டையும் வைத்திருக்கிறார். மேலும், வளையல்கள், நெற்றிச்சுட்டி உள்ளிட்ட நகைகளையும் உடுத்தி இருக்கிறார். அதேநேரம் அவர் அணந்திருந்த உடையும், காலணியும் சர்ச்சையைக் கிளப்புவதாக இருக்கிறது.
மோசமான செயல்
இப்படி மகா காளி மேக் அப் போட்ட யாஸ்மின் சில வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். அதில் ஒன்றில் அவர் "நமஸ்தே" என கைகளைக் கூப்புகிறார். மேலும், கிறிஸ்தவர்களின் சிலுவையை நக்குவது போலச் செய்கிறார். இந்த வீடியோ தான் இணையத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோக அந்த பாடலில் சிலுவையை வைத்து அவர் வேறு சில மோசமான செயல்களையும் செய்கிறார். மகா காளியைப் போல மேக் அப் போட்டுக் கொண்டு இதுபோல எப்படிச் செய்யலாம் எனப் பலரும் கண்டித்து வருகிறார்கள்.
கொந்தளிக்கும் நெட்டிசன்கள்
அவரது இந்த வீடியோ இந்து மத உணர்வுகளை மட்டுமின்றி, கிறிஸ்தவ மத உணர்வுகளையும் புண்படுத்துவதாகப் பலரும் விமர்சித்து வருகிறார்கள். நெட்டிசன் ஒருவர், "ஜெனிசிஸ் யாஸ்மின் மோகன்ராஜ் என்ற இயற்பெயர் கொண்ட டாமியின் இந்த பாடலை நான் கேட்டேன். அவர் கேரளாவையும், தமிழ்நாட்டையும் பூர்வீகமாகக் கொண்ட ஒரு கனடா நாட்டை சேர்ந்த கலைஞர். அவருடைய புதிய பாடல் இந்து மற்றும் கிறிஸ்தவ நம்பிக்கைகளைக் கேலி செய்கிறது. இது கலை இல்லை. முழுக்க முழுக்க குறிப்பிட்ட மதத்திற்கு அவமரியாதை செய்வது. இதை யூடியூப் உடனடியாக நீக்க வேண்டும்" என விமர்சித்துள்ளார்.
அதேபோல மற்றொரு நபர், "ஒரு கலாச்சாரத்தை இதுபோல தவறாகக் காட்டுவது தவறு.. இந்த வீடியோவை டெலிட் செய்துவிட்டு, மன்னிப்பு கேளுங்கள்! பழமையான ஒரு மதத்தை நீங்கள் அவமதிக்கிறீர்கள்!" என்று சாடியுள்ளார்.
யார் இந்த யாஸ்மின்
தமிழ் மற்றும் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்த 34 வயதான ராப் பாடகர் யாஸ்மின் மோகன்ராஜ். ஃபிலிம் மற்றும் சிற்பக்கலையில் பட்டம் பெற்றுள்ள இவர், பல முன்னணி நிறுவனங்களிலும் வேலை செய்தவர். அதன் பிறகே இவர் இசைத் துறையில் நுழைந்துள்ளார்.
இவர் கடந்த காலங்களிலும் சர்ச்சைக்குரிய பாடல்களைப் பாடியிருக்கிறார். இதற்காகவே இவர் புகழ்பெற்ற ராப்பராகவும் அறியப்படுகிறார். இவர் கடந்த 2015இல் அவ்புல் ரெக்கார்ட் (Awful Records) என்ற பாடல் மூலம் தனது இசை வாழ்க்கையைத் தொடங்கினார். கடந்த 2018இல் டாமி ஜெனிசிஸ் என்ற தனது முதல் ஆல்பத்தையும், 2021 இல் Goldilocks Xஐயும் வெளியிட்டார்.












Click it and Unblock the Notifications