பூகம்பத்தால் ஊஞ்சலாடிய அலங்கார விளக்கு.. துபாயிலும் உணரப்பட்ட நிலநடுக்கம் #dubai

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ஈராக்- ஈரான் எல்லையில் பயங்கர நிலநடுக்கம்- வீடியோ

  துபாய்: ஈராக்- ஈரான் எல்லையில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது துபாயில் ஒரு வீட்டின் சீலிங்கில் தொங்கவிடப்பட்டிருக்கும் அலங்கார விளக்கு ஊசலாடத் தொடங்கியது.

  ஈராக்கின் ஹலாப்ஜா நகரத்தில் நள்ளிரவு நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.3 -ஆக பதிவாகியுள்ளது. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் மக்கள் வீட்டை விட்டு அலறி அடித்துக் கொண்டு வந்தனர்.

  கட்டடங்கள் சரிந்து விழுந்த விபத்தில் 135 பேர் பலியாகிவிட்டனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த நிலநடுக்கமானது துபாய், குவைத், ஜார்ஜியா உள்ளிட்ட நாடுகளிலும் உணரப்பட்டது.

  துபாயில் நிலநடுக்கம்

  துபாயில் ஒரு வீட்டின் மேலே தொங்க வைக்கப்பட்டிருந்த அலங்கார விளக்கு ஊஞ்சலாடியது. இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ளது. இதுபோல் துபாயில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் குறித்து வலைஞர்கள் கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.

  புதுமையான உணர்வு

  துபாயில் நிலநடுக்கங்கள், நிலஅதிர்வுகள் ஏற்படுவது மிகவும் அரிது. இந்த நிலநடுக்கம் தனக்கு புதுமையான உணர்வை அளித்துள்ளது என்கிறார் இந்த வலைஞர்..

  பல்வேறு நாடுகளில்...

  பல்வேறு நாடுகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. துபாயிலும் உணரப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன என்று ஒரு கட்டடம் சரியும் படத்தை வெளியிட்டுள்ளார் இந்த வலைஞர்.

  10 வினாடிகள் நீடித்த நிலநடுக்கம்

  துபாயில் 7 முதல் 10 வினாடிகள் வரை இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

  மிகவும் பெரிய விஷயம்

  துபாயில் 10-ஆவது மாடியில் நிலநடுக்கம் உணரப்பட்டது மிகவும் பெரிய விஷயம் என்கிறார் இந்த நெட்டிசன்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Iran -Iraq border felt severe earthquake, as a part of this, surrounding countries also felt earthquake. In a house in Dubai a chandlier swings at the time of earthquake.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற