For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெட்ரோல் விலை அதிரடி குறைப்பு: வாழ்க்கையை அனுபவிக்கிறாங்கய்யா அமெரிக்காகாரங்க!

By Shankar
Google Oneindia Tamil News

வாஷிங்டன்(யு.எஸ்): கடந்த ஓராண்டில் அமெரிக்காவில் பெட்ரோல் விலை 25 சதவீதம் குறைந்திருப்பதால், மீதமாகும் பணத்தைக் கொண்டு ரெஸ்டாரண்ட், சுற்றுலா என்று அமெரிக்கர்கள் வாழ்க்கையை அனுபவித்து வாழ ஆரம்பித்துள்ளனர்.

பெட்ரோல் அநியாய விலைக்கு விற்கப்படும் நாடுகளில் முன்னணி இடம் வகிக்கிறது இந்தியா. நியாயமாக இப்போது லிட்டர் பெட்ரோல் 35 ரூபாய்க்கு விற்கலாம். ஆனால் இன்னும் 60-க்கு மேலேயே நிற்கிறது.

Cheapest U.S. Gasoline Prices Since 2004

ஆனால் அமெரிக்காவில் சென்ற ஆண்டு தொழிலாளர் தின வார இறுதியில் 3.44 டாலராக இருந்த சராசரி விலை இந்த ஆண்டு 2.42 டாலராக குறைந்துள்ளது. ஒரு கேலன் (3.78 லிட்டர்) பெட்ரோலுக்கு 1 டாலர் விலை குறைந்துள்ளது. அடுத்த ஆண்டு இறுதி வரை மூன்று டாலருக்கும் குறைவாகவே விலை நிலவரம் தொடரும் என்று அமெரிக்க எனர்ஜி தகவல் அமைப்பு தெரிவித்துள்ளது.

அதுவும் டல்லாஸ் போன்ற நகரங்களில் 2 டாலருக்கும் குறைவாகவே பெட்ரோல் விற்பனையாவது குறிப்பிடத்தக்கது.

ஒரு குடும்பத்திற்கு பெட்ரோல் விலை குறைவால் சுமார் 750 டாலர்கள் சேமிப்பு கிடைத்துள்ளது என்று ஏஏஏ(AAA) அமைப்பு கணக்கிட்டுள்ளது. மொத்தமாக குடும்ப சேமிப்பு , ஆறு மாத காலத்தில் 65 பில்லியன் டாலர்கள் எனவும் ஆண்டு இறுதிக்குள் 100 பில்லியன் டாலர்கள் ஆக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

க்ராண்ட் கேன்யன், மயாமி பீச், டிஸ்னிலேண்ட், தேசிய பூங்காக்கள் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

Cheapest U.S. Gasoline Prices Since 2004

மேலும் என்னென்ன விளைவுகள் பாருங்கள்...

* பெட்ரோல் விலை குறைவினால் கார்களின் விற்பனையும் பெருமளவு கூடியுள்ளது.
எஸ்யூவி கார்களின் விற்பனை 6 லட்சத்திற்கு மேலாக அதிகரித்துள்ளது.

* பெட்ரோல் விலை குறைந்தால் கூட, பம்புகளில் விற்பனையிலோ, லாபத்திலோ பாதிப்பு இல்லை. மாறாக கூடுதல் லாபம் கிட்டியுள்ளது.

* ஓட்டல்களில் அறைகள் அதிகளவுக்கு ரிசர்வ் செய்யப்படுகிறது.

* கிட்டத்தட்ட அனைத்து சில்லரை வணிகத் துறைகளிலும் விற்பனை பெருகியுள்ளது.

சுருங்கச் சொன்னால், பெட்ரோல் விலை குறைந்ததால் அமெரிக்கர்கள் என்ஜாயிங் பாஸ்..

உலக அளவிலான விலைக் குறைப்புதான் இதற்குக் காரணம் என்றாலும், இது ஒபாமா அரசின் சாதனையாகப் பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு தேர்தலில் நிச்சயம் இந்த சாதனை எதிரொலிக்கும் என்று கருதப்படுகிறது. ஒபாமா கட்சியின் சார்பில் போட்டியிடும் ஹிலரி க்ளிண்டனுக்கு பெருமளவுக்கு சாதகமான சூழல் என்றே அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

Cheapest U.S. Gasoline Prices Since 2004

வேலையில்லா திண்டாட்டம் பெருமளவு ஒழிந்துவிட்ட சூழலில், பெட்ரோல் விலை குறைந்து சேமிப்பு அதிகமாகியிருப்பது, நிச்சயம் கடந்த பத்தாண்டுகளில் அமெரிக்காவில் இல்லாத ஆரோக்கியமான சூழல்.

நம்மூரில் ஒரு வருடத்தில் எத்தனை பைசா குறைந்தது... எத்தனை ரூபாய் கூடியது என்று யோசிக்கிறீர்களா? வெங்காயம் விலை கூடினால்தானே நமக்கெல்லாம் அரசியல் மாற்றம் வரும். பெட்ரோல் விலைக்கெல்லாம் அரசியல் மாற்றம் வருவதில்லையே!

English summary
At an average of $2.44 a gallon, nationally, Americans are paying the cheapest price for gasoline over a Labor Day holiday weekend since 2004, according to separate forecasts from the U.S. Energy Information Administration and AAA.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X