For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு மூளையில் பாதிப்பு! என்ன நோய்? சிகிச்சை முறை என்ன? பரபர தகவல்

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: சீன அதிபர் ஜி ஜின்பிங் மூளை பகுதியில் தீவிர நோய்ப் பாதிப்பு ஒன்று ஏற்பட்டுள்ளதாகவும் இதற்காக அவர் சிகிச்சை எடுத்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Recommended Video

    China President Health Issues | Brain Aneurysm என்றால் என்ன? | Oneindia Tamil

    கடந்த 2013ஆம் ஆண்டு சீனாவின் 7ஆவது அதிபராகப் பொறுப்பேற்றுக் கொண்டவர் சீன அதிபர் ஜி ஜின்பிங். சீனாவின் அசுர வளர்ச்சி காரணமாகச் சர்வதேச அரங்கில் மிக முக்கிய தலைவர்களில் ஒருவராக ஜி ஜின்பிங் வலம் வருகிறார்.

    அண்ணா விட்ருங்க ப்ளீஸ்! அறைக்குள் சிக்கிய பாடகி! துப்பாக்கியுடன் 3 பேர்! விக்கித்து நின்ற போலீசார்.! அண்ணா விட்ருங்க ப்ளீஸ்! அறைக்குள் சிக்கிய பாடகி! துப்பாக்கியுடன் 3 பேர்! விக்கித்து நின்ற போலீசார்.!

    அதேநேரம் 68 வயதாகும் ஜி ஜின்பிங்கின் உடல்நிலை குறித்து இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகாமல் இருந்தது. இந்தச் சூழலில் அவருக்கு மூளைப் பகுதியில் மோசமான நோய் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

     ஜி ஜின்பிங்

    ஜி ஜின்பிங்

    சீன அதிபர் ஜி ஜின்பிங் 'பெருமூளை அனியூரிஸம்' நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக 2021ஆம் ஆண்டின் இறுதியில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த நோய்க்கு அறுவை சிகிச்சை செய்வதற்குப் பதிலாகப் பாரம்பரிய சீன மருந்துகளைக் கொண்டே சிகிச்சை எடுத்துக்கொள்ள அவர் விரும்பியதாகவும் கூறப்படுகிறது. இந்த சிகிச்சை முறையில் ரத்த நாளங்கள் மென்மையாகி அனீரிஸம் சுருங்கும்.

     பெருமூளை அனியூரிஸம் என்றால் என்ன

    பெருமூளை அனியூரிஸம் என்றால் என்ன

    மூளையில் உள்ள ரத்தக் குழாய் பலவீனம் அடைந்து, பலூன் போன்ற அமைப்புகள் ஏற்பட்டு, அது ரத்தத்தால் நிரம்புவதே பெருமூளை அனியூரிஸம் நோய் ஆகும். மூளையின் அடிப்பகுதிக்கும் மண்டை ஓட்டிற்கு இடையே தான் இந்த அனியூரிஸம் ஏற்படுகின்றன. அனியூரிஸம் கசிவு அல்லது சிதைவு ஏற்பட்டால் உயிருக்கே ஆபத்து ஏற்படும், உயர் ரத்த அழுத்தம், புகைப்பது, தலையில் அடி பட்டால் இந்த பெருமூளை அனியூரிஸம் பாதிப்பு ஏற்படும்.

     ஜி ஜின்பிங் உடல்நிலை

    ஜி ஜின்பிங் உடல்நிலை

    ஜி ஜின்பிங் உடல்நிலை பாதிக்கப்பட்டு உள்ளதாகக் கடந்த சில மாதங்களாகவே தகவல் வெளியாகி இருந்தது. கொரோனா தொடங்கிய காலம் முதல் பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் வரை அவர் வெளிநாட்டுத் தலைவர்களைச் சந்திப்பதைத் தவிர்த்தே வந்தார். கடந்த 2019 மார்ச் மாதம் ஜி ஜின்பிங் இத்தாலி சென்றிருந்த போதும் கூட, அவரது நடை அசாதாரணமாகவும் தளர்வுடன் காணப்பட்டது. பிரான்ஸ் சுற்றுப்பயணத்தின் போது, உட்காரக் கூட அவருக்கு மற்றவர்களின் உதவி தேவைப்பட்டது.

     உடல்நிலை பாதிப்பு

    உடல்நிலை பாதிப்பு

    இதேபோல், கடந்த அக்டோபர் 2020இல் ஷென்சென் நகரில் மக்களிடையே ஜி ஜின்பிங்க உரையாற்றிய போது, அவர் மிகவும் சோர்வுடன் காணப்பட்டார். மேலும், அவரது பேச்சும் வழக்கத்திற்கு மாறாக மெதுவாக இருந்தது. பேசும் போதும் தொடர்ந்து அவர் இருமிக் கொண்டே இருந்தார். இதன் காரணமாக அப்போதே ஜி ஜின்பிங் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

     3ஆவது முறை

    3ஆவது முறை

    தொடர்ந்து மூன்றாவது முறையாக ஜி ஜின்பிங் அதிபர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்காக ஜி ஜின்பிங் தன்னை முன்னிறுத்தி விளம்பரப்படுத்தும் பணிகளிலும் ஈடுபடத் தொடங்கிவிட்டார். சீன வரலாற்றிலேயே தனது ஆட்சியில் தான், வளர்ச்சி அபரிவிதமாக இருந்ததாகக் கூறி ஜி ஜின்பிங் விளம்பரப்படுத்தி வருகிறார். இந்தச் சூழலில், அவரது உடல்நிலை குறித்த இந்த செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

     சீன பொருளாதாரம்

    சீன பொருளாதாரம்

    அதேநேரம் உக்ரைன் மோதல் காரணமாக ஏற்பட்டுள்ள கச்சா எண்ணெய், எரிவாயு விலை உயர்வு மற்றும் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்ட பாதிப்பு, ஜீரோ கோவிட் திட்டம் உள்ளிட்டவை காரணமாகச் சீனாவின் பொருளாதாரம் மிகவும் நெருக்கடியில் உள்ளது. இந்தச் சூழலில் சீன அதிபர் உடல்நிலை குறித்த தகவல்கள் முதலீட்டாளர்களையும் சற்று சிந்திக்கவே வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

    English summary
    Chinese President Xi Jinping is suffering from cerebral aneurysm: (சீன அதிபர் ஜி ஜின்பிங் உடல்நிலை குறித்த தகவல்கள்) Chinese President Xi Jinping health latest updates in tamil.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X