For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி.. கொரோனா வைரஸ்.. என்ன நடந்தது.. வெள்ளை அறிக்கை வெளியிட்டது சீனா

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: : கொரோனா வைரஸ் தொற்று எப்படி பரவியது என்பது குறித்து சர்ச்சை நிலவி வரும் நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சீன அரசு, வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் வவ்வால் மூலமாக பரவியதாக கூறப்படுவதையும் ஆதாரங்களுடன் உறுதி செய்ய முடியவில்லை என்று கூறியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று முதல் முதலாக சீனாவில் தான் கண்டறியப்பட்டது.. ஜனவரி 3வது வாரத்தில் சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு பரவ ஆரம்பித்துது. இன்று 70 லட்சத்துக்கும் அதிகமானோரை பாதித்துவிட்டது.

4 லட்சம் பேர் இறந்துவிட்டனர் . கொரோனா வைரஸ் பரவல் பற்றி முன்கூட்டியே எச்சரிக்காமல், சீனா மறைத்து விட்டதாக அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன. சீனாவிலேயே இந்த நோயை கட்டுப்படுத்தி இருக்க முடியும் என்றும,சீனா அதை செய்ய தவறிவிட்டதாகவும் டிரம்ப் கூறியிருந்தார்.

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 69 லட்சத்தை தாண்டியதுஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 69 லட்சத்தை தாண்டியது

சீனா மீது புகார்

சீனா மீது புகார்

இதற்கிடையே கொரோனா வைரஸ், சீனாவின் வூஹான் நகரில் உள்ள வைரஸ் ஆராய்ச்சி நிலையத்தில் இருந்துதான் பரவியதாகவும், செயற்கை வைரஸ் என்றும் அமெரிக்கா குற்றம்சாட்டியது. ஆனால் செயற்கை வைரஸ் அல்ல, இயற்கையான வைரஸ், கோவிட் 19 ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது அல்ல என்றும் உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு ஆதரவு தெரிவித்தது. இந்நிலையில், சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார அமைப்பு செயல்பட்டடதால் அமெரிக்கா அதிருப்தி அடைந்தது. அந்த அமைப்பில் இருந்து விலகியதுடன், நிதி உதவியையும் ரத்து செய்தது.

சீனா அறிக்கை

சீனா அறிக்கை

இந்நிலையில், சீனா கொரோனாத சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவும், தங்கள் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுக்கும் விதமாகவும், கொரோனா வைரஸ் தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளது. சீன தகவல் தொடர்புத் துறை உதவி தலைவர் சூ லின், வெளியிட்டிருந்த அறிக்கையில், வுஹான் நகரில் உள்ள மருத்துவமனையில் , சில நோயாளிகளுக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்றவை வழக்கமான சளி, காய்ச்சலில் இருந்து வித்தியாசமாக இருப்பதாக கடந்தாண்டு, டிசம்பர் 27ம் தேதி, அரசுக்கு தகவல் வந்தது.

வேகமாக அதிகரித்தது

வேகமாக அதிகரித்தது

இதுபற்றி விசாரிக்க மருத்துவ நிபுணர்கள் அங்கு விரைந்தனர். நோயாளிகளை பரிசோதித்தார்கள். அவர்களுக்கு ஒரு வகையான வைரஸ் பாதிப்பு இருப்பபதை அவர்கள் உறுதி செய்தார்கள். . அடுத்த சில நாட்களில், சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, அங்கு வேகமாக அதிகரித்தது. இதையடுத்து, தொடர்ச்சியாக ஆய்வுகள் நடந்தது,. இதில், இந்த வைரஸ், மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் என்பதை உறுதி செய்வதற்கான போதிய ஆதாரங்கள் உடனடியாக கிடைக்கவில்லை.

ஆதாரங்கள் இல்லை

ஆதாரங்கள் இல்லை

வூஹான் நகரில் உள்ள இறைச்சிக் கூடத்திலிருந்துதான் கொரோனா பரவியதாக கூறப்படுவதை நிரூபிக்கவும் போதிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை.. வவ்வால் மூலமாக பரவியதாக கூறப்படுவதற்கும் ஆதாரங்கள் இல்லை. எனினும் இது அபாயகரமான வைரஸ் என்பது எங்களுக்கு ஜனவரி 14ம் தெரிய வந்தது. இதையடுத்து, வூஹான் நகரிலும், ஹூபே மாகாணத்திலும் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுததினோம்.

Recommended Video

    சீனாவின் திட்டத்தை அசால்ட்டாக கையாண்ட இந்தியாவின் வியூகம்
    உடனே சொல்லிவிட்டோம்

    உடனே சொல்லிவிட்டோம்

    பல்வேறு ஆய்வுகளுக்கு பின்னர் மனிதர்களிடமிருந்து சக மனிதர்களுக்கு பரவும் மோசமான வைரஸ் என்பதை ஜனவரி 19ம் தேதி நாங்கள் கண்டுபிடித்தோம். உடனே சீனா முழுவதும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டோம். உடனடியாக உலக சுகாதார நிறுவனத்துக்கும், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் கொரோனா வைரஸ் பற்றி தெரிவித்துவிட்டோம். ஜனவரி 3ம் தேதியில் இருந்தே பல்வேறு விஷயங்களை அமெரிக்காவிற்கு தெரிவித்து வந்தோம்" என்று கூறியுள்ளார்.

    English summary
    China's State Council Information Office on Sunday published a white paper titled "Fighting COVID-19: China in Action."
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X