For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'அறிவியலை சிறுமைப்படுத்தாதீங்க..' கொரோனா தோற்றம்.. WHO ஆய்வாளர்களை அனுமதி மறுக்கும் சீனா பாய்ச்சல்

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: கொரோனா வைரஸ் தோற்றம் குறித்து ஆய்வு செய்ய மற்றொரு குழுவை உலக சுகாதார மையம் வூஹான் நகருக்கு அனுப்பத் திட்டமிட்டிருந்த நிலையில், அதற்குச் சீன அரசு அனுமதி மறுத்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே உலகின் அனைத்து நாடுகளுக்கும் பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ள கொரோனா தான். உலகிலேயே வேறெந்த விஷயமும் பொதுமக்களை இத்தனை காலம் வீடுகளிலேயே முடங்கி இருக்க மாட்டார்கள்.

மும்பையில் 4 நாட்கள் கனமழை.. 5ஆவது நாளாக இன்று வெளுத்து வாங்கும்.. ரெட் அலர்ட் வார்னிங் மும்பையில் 4 நாட்கள் கனமழை.. 5ஆவது நாளாக இன்று வெளுத்து வாங்கும்.. ரெட் அலர்ட் வார்னிங்

தற்போது வேக்சின் பணிகளை அனைத்து நாடுகளும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.வேக்சின் பணிகள் தொடங்கிய பின்னரே இயல்பு வாழ்க்கை மெல்லத் திரும்பி வருகிறது.

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ்

கொரோனா வைரசுக்கு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும்கூட, கொரோனா வைரஸ் எப்படித் தோன்றியது என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது. வூஹான் நகரிலுள்ள விலங்கு சந்தையில் இருந்து வைரஸ் பரவியிருக்கலாம் என முதலில் கூறப்பட்டது. வூஹான் மையத்தில் இருந்து வைரஸ் பரவியிருக்கலாம் என்ற தகவலை சில மாதம் முன்பு வரை பெரும்பாலும் யாரும் ஏற்கவில்லை. சீனா சென்றிருந்த உலக சுகாதார அமைப்பின் ஆய்வுக் குழுவும்கூட அதைத்தான் தெரிவித்திருந்தது.

அமெரிக்கா புலனாய்வுத் துறை

அமெரிக்கா புலனாய்வுத் துறை

இந்தச் சூழ்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன் கொரோனா தோற்றம் குறித்து அமெரிக்கப் புலனாய்வுத் துறை அறிக்கை மீண்டும் வூஹான் மையத்தைப் பேசுபொருளாக்கியது. அதில் கடந்த 2019 அக்டோபர்- நவம்பர் காலத்திலேயே, வூஹான் மையத்தில் பணிபுரிந்த சிலருக்கு கொரோனா ஒத்த பாதிப்பு ஏற்பட்டிருந்தாகக் கூறப்பட்டிருந்தது. இது குறித்து விசாரணை நடத்த அமெரிக்க அதிபர் பைடனும் உத்தரவிட்டிருந்தார். அதேபோல பிரிட்டன், கனடா உள்ளிட்ட நாடுகளின் உளவு அமைப்புகளும் இதே கருத்தை முன் வைத்திருந்தன.

அனுமதிக்க முடியாது

அனுமதிக்க முடியாது

இந்தச் சூழலில் கொரோனா தோற்றம் குறித்து ஆய்வுகளை மேற்கொள்ள 2ஆம் கட்டமாக மற்றொரு குழுவைச் சீனாவுக்கு அனுப்பவுள்ளதாக உலக சுகாதார அமைப்பு கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்திருந்தது. ஆனால் உலக சுகாதார அமைப்பின் இந்த 2ஆம் கட்ட ஆய்வு திட்டத்தைச் சீன அரசு நிராகரித்துள்ளது. பொது அறிவியலுக்கு எதிரான அறிவியலைச் சிறுமைப்படுத்தும் கருத்து என்று சீன தேசிய சுகாதார ஆணையத்தின் துணை அமைச்சர் ஜெங் யெய்க்சின் தெரிவித்தார்.

அரசியல் கூடாது

அரசியல் கூடாது

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "சீன ஆய்வகங்களில் இருந்து கொரோனா பரவியிருக்கலாம் என்றும் இதனால் ஆய்வகங்களில் சோதனை செய்ய விரும்புவதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது உண்மையில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. உலக சுகாதார அமைப்பு தனது கருத்துகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும். கொரோனா தோற்றத்தை அறிவியல்பூர்வமான ஒன்றாகப் பார்க்க வேண்டும். இதில் அரசியலை இடம்பெறச் செய்யக்கூடாது' என்றும் அவர் தெரிவித்தார்.

Recommended Video

    100 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தாக்கும் Monkey B Virus | Noro Virus
    வூஹான் மையம்

    வூஹான் மையம்

    வூஹான் ஆய்வகத்தில் இருந்து கொரோனா பரவியது என்ற கருத்தைச் சீனா தொடக்கம் முதலே மறுத்து வருகிறது. அதிலும்கூட ஒரு கட்டத்தில் வேறு நாடுகளில் இருந்து கொரோனா சீனாவுக்கு வந்திருக்கலாம், சீனாவில் முதலை அது உறுதி செய்யப்பட்டதாலேயே இங்கு தான் தோன்றியது என்று கூற முடியாது என்றெல்லாம் சொல்லியது. இருந்தாலும்கூட உலக சுகாதார அமைப்பின் ஆய்வாளர்களையே தங்கள் நாட்டிற்குச் சீனா மறுப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. வூஹான் மையத்தில் இருந்து கொரோனா வெளியேறவில்லை என்றால் உலக சுகாதார அமைப்பின் ஆய்வாளர்களை அனுமதிக்க மறுப்பது ஏன் என ஆய்வாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    English summary
    China rejected the World Health Organization plan for the second phase of an investigation into the origin of the coronavirus. first, known cases emerged in the central Chinese city of Wuhan in December 2019.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X