மீண்டும் சீனாவில் கொரோனா பாதிப்பு.. இதை முடிவுக்கு கொண்டுவர என்னதான் வழி? விழிபிதுங்கும் ஆய்வாளர்கள்
பெய்ஜிங்: சீனாவின் வூஹான் நகரில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அங்கு இருக்கும் 1.12 கோடி மக்களிடம் கொரோனா பரிசோதனை செய்யும் நடவடிக்கைகளில் அந்நாட்டு அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.
Recommended Video
கடந்த 2019இல் இறுதியில் முதல்முதலில் சீனாவின் வூஹான் நகரிலேயே கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. கொரோனாவின் தோற்றம் பற்றி இன்னும் தெளிவாக நமக்கு எதுவும் தெரியவில்லை.
ஆனால், கடந்த 2 ஆண்டுகளாகவே ஒட்டுமொத்த உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. எந்த நாடும் இதுவரை கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து தப்பவில்லை.

கொரோனா வைரஸ்
என்னதான் சீனாவில் முதல் முதலில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டாலும், கடுமையான ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் மூலம் அந்நாடு மிக விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டது. கொரோனா பரவ தொடங்கியதுமே முக்கிய நகரங்களில் முழு ஊரடங்கைச் சீனா அறிவித்தது. வீடுகளை விட்டு வெளியே வர மக்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நகரங்களில் வசிக்கும் மக்களுக்கு முழுமையாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட பிறகே, வீடுகளை விட்டு வெளியே வர மக்கள் அனுமதிக்கப்பட்டனர்.

சீனா
கடந்த ஆண்டு பிற்பகுதியில் உலகமே கொரோனா பாதிப்பு காரணமாகத் திண்டாடிக் கொண்டிருந்த சமயத்தில், சீனா மட்டும் இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருந்தது. பார்ட்டிகள், பட்டமளிப்பு விழா என கிட்டதட்ட வழக்கமாக அனைத்து நடவடிக்கைகளையும் சீனா தொடங்கிவிட்டது. அதி தீவிரமான கட்டுப்பாடுகள் மூலம் வைரஸ் பாதிப்பை மிகச் சிறப்பாகக் கட்டப்படுத்தியது. இந்தச் சூழலில் தான் இப்போது மீண்டும் சீனாவை கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. இந்த முறை டெல்டா கொரோனா பாதிப்பு.

டெல்டா கொரோனா
இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட டெல்டா கொரோனா இப்போது உலக நாடுகளில் வேகமாகப் பரவி வருகிறது. 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இப்போது டெல்டா கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுதான் இப்போது சீனாவுக்குத் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. பல வாரங்களாக கட்டுக்குள் இருந்து கொரோனா பாதிப்பு, சீனாவில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அங்கு ஒரு சில நாட்களில் 100க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா பரிசோதனைகள்
குறிப்பாக, கடந்த 2019இல் கொரோனா முதலில் கண்டறியப்பட்ட வூஹான் நகரில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் அங்குள்ள 1.12 கோடி மக்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் நகரிலுள்ள மக்களிடையே மாதிரிகள் சேமிக்கப்பட்டு, பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல நகரங்களில் சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

கொரோனா வேக்சின்
என்ன தான் தீவிரமான கட்டுப்பாடுகளை விதித்து கொரோனாவை கட்டுப்படுத்தினாலும் அது தற்காலிகமானது தான் என்பதையே இது காட்டுகிறது. வேக்சின் மட்டுமே கொரோனாவை தடுக்க ஒரே தீர்வு. பொதுமக்கள் அனைவரும் வேக்சின் எடுத்துக் கொண்டால் மட்டுமே, கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த முடியும் என்பதால், எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக கொரோனா வேக்சின்களை எடுத்துக் கொள்ள வேண்டும் என ஆலோசனை அளித்துள்ளனர்.
-
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல்












Click it and Unblock the Notifications