"அதுக்கு வாய்ப்பே இல்லை.. நாங்க எப்போதும் ரஷ்யா பக்கம்.." உலக நாடுகளுக்கு உறுதியாகச் சொன்ன சீனா
பெய்ஜிங்: உக்ரைன் மீதான போருக்குப் பின்னர், பல்வேறு உலக நாடுகளும் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்து வரும் நிலையில் சீனா இது குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
உக்ரைன் நாட்டின் மீது கடந்த வியாழக்கிழமை ரஷ்யா போர் தொடுத்தது. ரஷ்யா அதிபர் புதின் உத்தரவைத் தொடர்ந்து ஆரம்பித்த இந்தப் போர் கடந்த 6 நாட்களாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நகரங்கள் அருகே வான்வழித் தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக் கணக்கான மக்கள் உக்ரைனில் இருந்து வெளியேறவும் முயன்று வருகின்றனர்.

உக்ரைன் போர்
உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷ்யா கடந்த சில மாதங்களாகவே ராணுவத்தைக் குவித்து வந்தது. மேலும், போர் பயிற்சிகளையும் உக்ரைன் எல்லைக்கு மிக அருகே தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்தது. இருப்பினும், ரஷ்யா முழு வீச்சில் போரைத் தொடங்கும் என யாருமே எதிர்பார்க்கவில்லை. போர் ஆரம்பித்த பின்னர் பிரிட்டன், அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றியம் எனப் பல நாடுகளும் பொருளாதாரத் தடைகளை அறிவித்து வருகின்றன,

சீனா
வரும் நாட்களில் மேலும் பல பொருளாதாரத் தடைகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் பெரும்பாலான நாடுகள் புதினின் இந்த ராணுவ நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன, இருப்பினும், சிரியா, ஈரான், பெலாரஸ் உள்ளிட்ட சில நாடுகள் மட்டும் ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளன. இந்த விவகாரத்தில் ரஷ்ய ஆதரவு நிலைப்பாடு எடுத்துள்ள சீனா, இதைப் போர் என அழைக்கக் கூடாது என்றும் ராணுவ நடவடிக்கை என்றே குறிப்பிட வேண்டும் என்றும் கூட தெரிவித்திருந்தது.

பொருளாதாரத் தடைகள்
இதனிடையே உலகின் பல்வேறு நாடுகளும் ரஷ்யாவுக்கு எதிராகப் பொருளாதாரத் தடைகளை அறிவித்து வரும் நிலையில், சீனா இதுபோல எந்தவொரு தடையையும் விதிக்காது என்று அந்நாடு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயுவை அதிகம் வாங்கும் நாடாக உள்ள சீனா, ஏற்கனவே உலக நாடுகள் ரஷ்யா மீது விதிக்கும் பொருளாதாரத் தடைகளைக் கடுமையாக எதிர்த்துள்ளது.

எதிர்ப்பு
இது தொடர்பாக சீன வங்கி மற்றும் காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் குவோ ஷுகிங் கூறுகையில், "நாங்கள் அத்தகைய தடைகளை விதிக்கப் போவதில்லை. இந்த விவகாரத்தில் அனைத்து நாடுகள் உடனும் வழக்கமான ஒரு சாதாரண பொருளாதார, வர்த்தக மற்றும் நிதி பரிமாற்றங்களை வைத்திருப்போம். ஒருதலைபட்சமாக அறிவிக்கப்படும் உலக நாடுகளின் தடைகளை நாங்கள் ஏற்கவில்லை, இது போன்ற பொருளாதாரத் தடைகள் நிலைமை மேம்படுத்த உதவாது. எந்தவொரு நல்ல விளைவுகளையும் ஏற்படுத்தாது" என்றார்.

சீனா
முன்னதாக ரஷ்யா போரைத் தொடங்கிய சமயத்திலும் சட்டவிரோதமாகப் பொருளாதாரத் தடைகளை விதிக்கக் கூடாது என எதிர்த்த சீனா, உக்ரைனில் பதற்றம் அதிகரிக்க அமெரிக்காவே காரணம் எனக் குற்றம் சாட்டியது, அதே நேரத்தில் அமைதியான முறையில் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications