For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெரிய பிரச்சனை வர போகிறது.. தயாராக இருங்கள்.. சீனாவை எச்சரிக்கும் மூத்த அதிகாரி.. பரபரப்பு பின்னணி!

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: இந்தியா - சீனா இடையிலான மோதல் கண்டிப்பாக பெரிதாக வெடிக்கும், இது போராக மாற அதிக வாய்ப்புள்ளது என்று சீனாவின் அரசுக்கு அந்நாட்டு மூத்த ராணுவ அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியா சீனா எல்லையில் லடாக் அருகே நிமிடத்திற்கு நிமிடம் பதற்றம் அதிகரித்து வருகிறது. லடாக்கில் அனைத்து பகுதிகளிலும் சீனா தொடர்ந்து படைகளை குவித்து வருகிறது.

அங்கு இந்தியாவின் ராணுவ படையும், விமான படையும் தீவிரமாக ரோந்து பணிகளை செய்து வருகிறது. கல்வான் மோதலுக்கு பின் இரண்டு நாட்டு எல்லையிலும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

பெரிய பெரிய கூடாரம்.. அதிர வைத்த அந்த 9 கிமீ பகுதி.. கால்வானில் சீனாவின் திட்டம்தான் என்ன? பின்னணி!பெரிய பெரிய கூடாரம்.. அதிர வைத்த அந்த 9 கிமீ பகுதி.. கால்வானில் சீனாவின் திட்டம்தான் என்ன? பின்னணி!

என்ன சொன்னார்

என்ன சொன்னார்

இந்த நிலையில் சீனாவின் முன்னாள் விமானப்படை மேஜர் ஜெனரல் மற்றும் அந்நாட்டு பாதுகாப்பு ஆலோசகர்களில் ஒருவரான குயோ லியாங் சீன நாட்டு அரசுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில், இந்தியா சீனா பிரச்சனை இப்போது சரியாகாது.இது முழு அளவில் பெரிதாக வெடிக்க வாய்ப்புள்ளது. சீனா இதற்கு தயாராக இருக்க வேண்டும். இந்தியாவை நாம் குறைவாக எடை போட கூடாது.

நமது எல்லை

நமது எல்லை

நமது எல்லைகளை நாம் கவனமாக பாதுகாக்க வேண்டும். எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் நாம் செயல்பட வேண்டும். முதல் ஆளாக நாம் படைகளை குவிக்க வேண்டும். நாம் போருக்கு தயாராக இருக்க வேண்டும். இந்தியாவை முதல் ஆளாக தாக்க தயாராக இருக்க வேண்டும். சிறிய சிறிய போர் மூலம் இந்தியாவை கட்டுப்படுத்த நாம் திட்டங்களை வகுக்க வேண்டும்.

அணு ஆயுதம்

அணு ஆயுதம்

இரண்டு நாடுகளும் அணு ஆயுத பலம் கொண்ட நாடுகள். எல்லையில் ஆயுதங்களை களமிறக்க நாம் தொடங்க வேண்டும். எப்போது வேண்டுமானாலும் இந்த பிரச்சனை மிக மோசமான நிலையை அடையும். அதேபோல் நாம் ரோந்து பணிகளை அதிகமாக்க வேண்டும். இந்தியா எப்போது வேண்டுமானாலும் அத்துமீறலை நிகழ்த்த வாய்ப்புள்ளது. முழுமையான பிரச்சனை தீர இப்போது வாய்ப்பு இல்லை.

பெரிய பிரச்சனை

பெரிய பிரச்சனை

எல்லையில் இந்தியாதான் அத்துமீறல்களை செய்து வருகிறது. சீனாவின் கேம்ப்களை இந்தியாதான் அத்துமீறி அகற்றி வருகிறது. சீனா இதை அனுமதிக்க கூடாது. இதே சம்பவம் இனியும் தொடர்ந்தால் உடனே சீனா பதிலடி கொடுக்க வேண்டும். தக்க ராணுவ தாக்குதல் மூலம் இந்தியாவிற்கு சீனா உடனே பதிலடி கொடுக்க வேண்டும். எல்லையில் இந்தியாவின் அத்துமீறலை சீனா வேடிக்கை பார்க்க கூடாது.

Recommended Video

    எல்லையில் China -க்கு சரியான பதிலடி - Modi
    பேச்சுவார்த்தை தோல்வி

    பேச்சுவார்த்தை தோல்வி

    பேச்சுவார்த்தை மூலம் பிரச்னையை தீர்க்கும் காலம் இனி இல்லை என்று பாதுகாப்பு ஆலோசகர்களில் ஒருவரான குயோ லியாங் தெரிவித்துள்ளார். அந்நாட்டு அரசுக்கு இவர் விடுத்துள்ள எச்சரிக்கை மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. சீனா ஏற்கனவே எல்லையில் போருக்கு தயார் ஆகி வருகிறது. தற்போது அங்கு மூத்த அதிகாரி ஒருவர் அரசுக்கு இப்படி எச்சரிக்கை விடுத்துள்ளதால் நிலைமை இன்னும் மோசமாகி உள்ளது.

    English summary
    China standoff with India: Issue will escalate soon says Beijing Army expert and former Air force official.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X