கட்டிப்பிடிக்க தனி கட்டணம்.. இளைஞர்கள் ஆரம்பித்த புதிய பிஸ்னஸ்.. ஆர்வமாக குவியும் சீன பெண்கள்!
பெய்ஜிங்: நவீனக் காலத்தில் இளைஞர்கள் பலரும் தனிமையில் தவித்து வருகிறார்கள். இதற்கிடையே மன உளைச்சலால் பாதிக்கப்படும் இளம்பெண்களுக்குக் கட்டியணைத்து ஆறுதல் கூறும் சேவையைச் சீனாவில் ஆரம்பித்துள்ளனர். அதாவது பணம் கொடுத்து இளைஞர்களைக் கட்டிப் பிடித்து, தங்கள் பிரச்சனைகளை அங்குள்ள பெண்கள் புலம்பித் தள்ளுவார்களாம்.
இந்த நவீனக் காலத்தில் நாம் பெரும்பாலான நேரம் வேலையை நோக்கியே ஓடிக் கொண்டு இருக்கிறோம். இதனால் நமக்குத் தேவையான எமோஷனல் சப்போர்ட் கிடைப்பதில்லை. குறிப்பாக நகர்ப்புறங்களில் வாழும் இளைஞர்கள், இளம்பெண்கள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள். சீனாவிலும் இந்தப் பிரச்சனை பெரிதாக வெடித்துள்ளது.

எமோஷனல் ஆதரவு
அங்கு இளம்பெண்கள் எமோஷனல் ஆதரவு கிடைக்காமல் தவிக்கிறார்களாம். இதற்காக அங்கு 'மேன் மம்' (Man Mum) என்று சேவை பிரபலமாகி வருகிறது. அதில் இளைஞர்கள், மன உளைச்சலில் இருக்கும் பெண்களைக் கட்டித் தழுவுவார்களாம்.. இந்தக் கட்டித் தழுவுதல் ரொமான்டிக்காக இருக்காது. மாறாக எமோஷனல் சப்போர்ட்டிற்காக மட்டுமே இருக்குமாம்.
தனிக் கட்டணம்
கல்வி நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் அழுத்தம் அதிகரித்து வரும் நிலையில், பெண்கள் ஒரு சிறிய ஆறுதல் தேடி இந்தச் சேவையை நாடுகின்றனர். சீன சமூக வலைத்தளங்களில் இது தொடர்பாக இப்போது பரவலாக விவாதம் எழுந்துள்ளது.. இந்தச் சேவையின் கீழ் ஐந்து நிமிடக் கட்டி அணைக்க 20 முதல் 50 யுவான் (சுமார் ₹250-₹600) வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அங்குக் கல்லூரி படிக்கும் பெண் ஒருவர் முதலில் இது குறித்த தனது அனுபவத்தைப் பகிர்ந்தார். அதாவது தான் மன உளைச்சல் இருந்தபோது நண்பரைக் கட்டித் தழுவியதாகவும் அப்போது ஆறுதல் கிடைத்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். அது இணையத்தில் டிரெண்டான நிலையில், இப்போது அதையே சில இளைஞர்கள் பிஸ்னஸாக மாற்றிவிட்டார்கள்.
என்ன நடக்கும்
முதலில் தெரிந்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த இது, பிறகு சாட் தளங்கள் மூலம் பிஸ்னஸாக மாறியுள்ளது. அங்குள்ள பெண்கள் பாதுகாப்பான அரவணைப்பை விரும்புகிறார்கள். பூங்காக்கள், மெட்ரோ நிலையங்கள் மற்றும் வணிக வளாகங்களில் இந்த ஆண்களைச் சந்திக்க விரும்புகிறார்கள். ஆண்கள் அந்த குறிப்பிட்ட இடத்திற்கு வருவார்கள். பெண்களும் வந்த பிறகு அவர்களைக் கட்டியணைத்து அவர்கள் புலம்புவதைக் கேட்பார்கள். அவ்வளவு தான். அதற்குத் தான் கட்டணம் செலுத்துகிறார்கள்.
இப்படித் தான் அங்குப் பெண் ஒருவர் 3 மணி நேர ஓவர்டைமிற்கு பிறகு இந்த சர்வீஸை எடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "அவர் அரவணைத்தார்.. என் அலுவலகப் பிரச்சனைகளைக் கேட்டார்.. அதுவே எனக்கு நிம்மதி தருவதாக இருந்தது" என்கிறார்.
தனிமை தான் சிக்கல்
சீனாவில் இளைஞர்களிடையே எந்தளவுக்குத் தனிமை பெரிய பிரச்சனையாக மாறியிருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. இந்தக் காலத்தில் இளைஞர்களுக்குச் சமூக வலைத்தளங்களில் ஏகப்பட்ட நண்பர்கள் இருந்தாலும் கூட நிஜ வாழ்க்கையில் தனிமையுடன் போராடுகிறார்கள். அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள், வேலை பாதுகாப்பின்மை மனநலனைப் பாதிக்கின்றன.
சில பெண்கள் இந்த ஆண்களுக்குக் காபி, சிற்றுண்டிகள் அல்லது சிறிய பரிசுகளைச் சேர்த்துக் கொடுத்து நன்றி தெரிவிக்கிறார்கள். இருப்பினும், இந்த முறைக்கும் அங்கு விமர்சனங்களும் இருக்கவே செய்கிறது. பழமைவாதிகள் இதுபோன்ற திட்டங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications