முக்கிய தலையை பதவியில் இருந்து தூக்கிய சீனா.. உலக வர்த்தக அமைப்பின் பிரதிநிதி மாற்றம்
பெய்ஜிங்: உலக வர்த்தக அமைப்பின் சீன நிரந்தர பிரதிநிதியான மூத்த சீன வர்த்தக பேச்சுவார்த்தையாளர் லீ செங்காங், அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீனா - அமெரிக்கா இரு நாடுகளுக்கும் இடையே அதிகரித்து வரும் கட்டணப் போருக்கு மத்தியில், வர்த்தக சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்துவது குறித்து ஒப்புக்கொண்ட பின்னர், அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே பேச்சுவார்த்தை ஒப்பந்தம் ஏற்பட்டது.

டிரம்ப் சீன இறக்குமதிகள் மீது 100 சதவீத வரியை விதித்தார். இது வர்த்தக பதட்டங்களைத் தூண்டியது. அமெரிக்காவின் பதிலடி, உலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளுக்கிடையிலான உறவுகளைப் பாதிக்கும் ஒரு நேரடி சூழ்நிலையை உருவாக்கியது.
அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட், லீ செங்காங், கட்டுப்பாடற்றவர் என்று விமர்சித்தார். ஆகஸ்ட் மாதம் வாஷிங்டனுக்கு சென்றபோது, "சீனக் கப்பல்களுக்கான எங்கள் கப்பல் கட்டணங்களை அமெரிக்கா தொடர்ந்தால், சீனா உலக அமைப்பில் குழப்பத்தை ஏற்படுத்தும்" என்று லீ அச்சுறுத்தியதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், சீனாவின் சின்ஹுவா செய்தி நிறுவனம் இன்று உலக வர்த்த அமைப்பின் (WTO) நிரந்தர பிரதிநிதி பதவியில் இருந்து லீ செங்காங் நீக்கப்பட்டதாக செய்தி வெளியிட்டது. இந்த நீக்கம் குறித்து, பெய்ஜிங்கின் வெளியுறவு அமைச்சகம் AFP இடம் "இது ஒரு வழக்கமான பணியாளர் மாற்றம்" என்று கூறியுள்ளது.
இந்தியாவின் மின்சார வாகனங்கள், பேட்டரிக்கு வழங்கப்படும் மானியங்களால், தங்கள் நாட்டின் பொருளாதார நலன் பாதிப்பதாக, உலக வர்த்தக அமைப்பில், சீனா அண்மையில் புகார் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், உலக வர்த்தக அமைப்பின் சீன நிரந்தர பிரதிநிதி நீக்கப்பட்டுள்ளார்.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி












Click it and Unblock the Notifications