தொழிலாளி பிறந்தநாளுக்கு கேக் ஆர்டர் செய்த வாடிக்கையாளர்.. அந்த மனசு தான் சார் கடவுள்
சீனாவில் உணவு சப்ளை செய்யும் தொழிலாளியின் பிறந்தநாளுக்கு வாடிக்கையாளர் ஒருவர் கேக் ஆர்டர் செய்த வீடியோ வைரலாகியுள்ளது.
பிஜீங்: சீனாவில் உணவு சப்ளை செய்யும் தொழிலாளியின் பிறந்தநாளுக்கு கேக் ஆர்டர் செய்து மகிழ்ந்திருக்கிறார் வாடிக்கையாளர் ஒருவர்.
உலகமே இன்று திண்டாடிக்கொண்டிருப்பதற்கு காரணம் சீனாவின் ஊகான் நகரம் தான். அங்கிருந்து ஆட்டத்தை ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி, மக்களை கதிகலங்க செய்துள்ளது.

ஆனால் ஊகான் நகரம் இன்று கொரோனா தாக்கத்தில் இருந்து மீண்டுவிட்டது. மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து ஊகான் நகரம் மீள்வதற்கு அங்குள்ள மருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள், உணவு விநியோக தொழிலாளர்கள் உள்ளிட்ட பலர் தான் காரணம். அல்லும் பகலும் உழைத்து, அந்நகரை கொரோனாவிடம் இருந்து மீட்டிருக்கின்றனர்.
அவர்களை கவுரவிக்க நினைத்த ஊகான் நகரைச் சேர்ந்த ஒருவர், ஒரு பேக்கரியில் கேக் ஆர்டர் செய்துள்ளார். அந்த கேக்கை உணவு விநியோகிக்கும் தொழிலாளர் ஒருவருக்காக அவர் ஆர்டர் செய்துள்ளார்.
கேக்கை டெலிவரி எடுக்க சென்ற அந்த தொழிலாளர், தனது பிறந்தநாளுக்காக கேக் ஆர்டர் செய்யப்பட்டதை அறிந்து நெகிழ்ந்து போனார். அயராது உழைத்து கொண்டிருக்கும் அந்த மனிதருக்கு, தனது பிறந்தநாளே மறந்துபோய்விட்டது. வாடிக்கையாளர் கேக் ஆர்டர் செய்ததன் மூலம் தான் தனக்கு பிறந்தநாள் என்பதே நினைவுக்கு வந்திருக்கிறது.
தன் மீது வாடிக்கையாளர் வைத்திருக்கும் அன்பை நினைத்து கண் கலங்கிவிட்டார் அந்த தொழிலாளர். ஏதோ ஒரு ரோட்டோரத்தில் அமர்ந்து கண்ணில் நீருடன் அந்த கேக்கை தொழிலாளர் சாப்பிடும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.
கொரோனா எனும் கொடிய அரக்கனால் நாம் அனைவருமே இன்று கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறோம். ஒருவெருக்கு ஒருவர் தொட்டு பேசி ஆறுதல் கூறக்கூட முடியாத நிலையில் தவித்துக்கொண்டிருக்கிறோம். இந்த சூழலில் இது போன்ற செயல்கள் தான் மனிதம் உயிர்ப்புடன் இருக்கிறது என்பதற்கு சான்று.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications