கழுதைக்குத் தெரியுமா.. பல்லாயிரம் வருட கல்லை 3 உதையில் உடைத்த சீனர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சாங்க்டோவா, சீனா: சீனாவில் பல்லாயிரம் ஆண்டு வயது கொண்ட கற்பாறையே பொறுப்பே இல்லாமல் 3 உதையில் உடைத்து தரைமட்டமாக்கி விட்டார் ஒரு சுற்றுலாப் பயணி. அவரது செயல் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சீனாவின் குயிஸோ மாகாணத்தில் உள்ளது சாங்டோவா நகரம். இது மிகவும் பழமையான ஊராகும். இங்கு இயற்கையாக உருவாகிய பாறை குகை உள்ளது. இங்கு சின்ன சின்னதாக குட்டி குட்டி பாறைகள் நிறைந்து உள்ளன. அனைத்துமே பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவாகியவையாகும்.

Chinese youth breaks thousand yeaer old rock in just 3 kicks

இந்த நிலையில் இந்த குகைக்கு சுற்றுலா வந்த சீன நபர் ஒருவர் தனக்கு முன்பு இருந்த சின்ன சைஸ் கல்லை தனது காலால் 3 உதை உதைத்து தரைமட்டமாக்கினார். இந்தக் கல்லானது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவானதாகும். அதை ஜஸ்ட் லைக் தட் உடைத்து தரைமட்டமாக்கிய செயல் அதிர வைத்துள்ளது.

பலரும் அந்த நபரை தாறுமாறாக திட்டி கமெண்ட் போட்டு வருகின்றனர். இதுகுறித்த வீடியோ வைரலாகவும் பரவி வருகிறது.

இந்த நபரை போலீஸார் தேடி வருகின்றனர். அவர் பிடிபட்டாலும் கூட அவருக்கு வெறும் 500 யுவான் அபராதம் மட்டுமே விதிக்கப்படுமாம்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A tourist youth has broken a thousand year old rock formation in just 3 kicks in China. The video has gone viral.
Please Wait while comments are loading...