For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மணிக்கு 2 லட்சம் கி.மீ வேகத்தில் சூரியனை நோக்கி பாய்ந்து செல்லும் 'ஐசான்'!

Google Oneindia Tamil News

டெல்லி: சூரியனை நோக்கி நகர்ந்து வந்த ஐசான் வால் நட்சத்திரம் தற்போது சூரியனுக்கு மிக அருகே போய் விட்டது. மணிக்கு 2 லட்சம் கிலோமீட்டர் என்ற வேகத்தில் அது படு வேகமாக போய்க் கொண்டிருக்கிறது.

இந்த வால் நட்சத்திரம் சூரியனை நெருங்கும்போது மொத்தமாக பொசுங்கிப் பஸ்பமாகி விடும்.. அல்லது தப்பிப் பிழைத்து பூமியில் உள்ள மக்களுக்கு மேலும் சில காலம் வண்ணக் கோலத்தைக் காட்டி நிற்கும்.

நவம்பர் 28ம் தேதி வியாழக்கிழையன்று சூரியனை கடக்கவுள்ளதாம் ஐசான். தற்போது அது சூரியனின் பரப்புக்கு மேலே கிட்டத்தட்ட பத்து லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் நிற்கிறதாம்.

ஸ்டீரியோ கொடுத்த படம்

ஸ்டீரியோ கொடுத்த படம்

நாசாவின் ஸ்டீரியோ எனப்படும் Solar Terrestrial Relations Observatory யின் எச்ஐ 1 கேமரா ஐசான் வால்நட்சத்திரத்தின் லேட்டஸ்ட் நிலையை படம் பிடித்துள்ளது. அந்தப் படத்தை நாசா வெளியிட்டுள்ளது. நவம்பர் 21ம் தேதி பிடிக்கப்பட்ட படமாகும் இது.

சூரியனுக்கு வெகு அருகே

சூரியனுக்கு வெகு அருகே

தற்போதுதான் சூரியனுக்கு மிக அருகே வந்துள்ளது ஐசான் என்பதால், அதன் நிலை குறித்து பெரும் எதிர்பார்ப்புடன் விண்ணியல் ஆர்வலர்களும், விஞ்ஞானிகளும் உள்ளனர்.

மணிக்கு 2 லட்சம் கிலோமீட்டர் வேகத்தில்

மணிக்கு 2 லட்சம் கிலோமீட்டர் வேகத்தில்

தற்போது சூரியனை நெருங்க நெருங்க ஐசான் போகும் வேகமும் அதிகரித்துக் கொண்டிருக்கிறதாம். கடந்த ஜனவரி மாதம் ஐசான் வால் நட்சத்திரத்தின் நகர்வு நேரம் மணிக்கு 64,000 கிலோமீட்டர் என்ற அளவில் இருந்தது. தற்போது இது மணிக்கு இரண்டு லட்சத்து 40 ஆயிரம் கிலோமீட்டர் என்ற அதி வேகத்திற்கு மாறியுள்ளது.

நெருங்க நெருங்க இன்னும் வேகம்

நெருங்க நெருங்க இன்னும் வேகம்

இன்னும் சூரியனுக்கு மி்க அருகில் போகும்போது அதன் வேகம் மணிக்கு 10.3லட்சம் கிலோமீட்டர் வேகத்தில் இருக்குமாம்.

2012ல் கண்டுபிடிப்பு

2012ல் கண்டுபிடிப்பு

2012ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த வால்நட்சத்திரத்தை ரஷ்யாவைச் சேர்ந்த இரண்டு விண்வெளி வீரர்கள் கண்டறிந்தனர்.

உருக்குலையவில்லை

உருக்குலையவில்லை

தற்போது ஐசான் வால்நட்சத்திரம் பெரிய அளவில் உருக்குலையவில்லை என்று நாசாவின் புதிய படத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.

இன்னும் அது கட்டுக்குலையாமல் இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. முன்னதாக அதன் மையப் பகுதி சிதற ஆரம்பித்து விட்டதாக செய்திகள் வந்திருந்தன என்பது நினைவிருக்கலாம்.

English summary
Astronomers and amateur sky-gazers are waiting with bated breaths as the Comet ISON hurtles towards the Sun for a close encounter on Thanksgiving. The Comet will either be vaporized by the CME (coronal mass ejection) ejected by the Sun or might possibly put up a spectacular show in the December sky.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X