For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒரே வாரம்..! மீண்டும் மளமளவென உயர தொடங்கிய கொரோனா பாதிப்பு.. என்ன காரணம்.. வார்னிங் தரும் WHO

Google Oneindia Tamil News

ஜெனிவா: இந்தோனிசியா, பிரிட்டன், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் வைரஸ் பாதிப்பு 12% வரை அதிகரித்துள்ளதாக எச்சரித்துள்ளது.

கொரோனா வைரஸ் - கடந்த 1.5 ஆண்டுகளாக அனைத்து உலக நாடுகளுக்கும் பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது இதுதான். அனைத்து நாடுகளும் கொரோனா பாதிப்பை சமாளிக்க பெரும் போராட்டத்தையே நடத்தி வருகின்றன.

குறிப்பிட்ட சில காலம் ஒரு நாட்டில் வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் இருந்தாலும்கூட, புதிய உருமாறிய கொரோனா வைரஸ்கள் பாதிப்பை மீண்டும் அதிகரிக்க செய்கின்றன.

எடியூரப்பா இல்லாமல் கர்நாடகாவில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வரவே முடியாது-சு.சுவாமி ஸ்டிராங் ஆதரவு எடியூரப்பா இல்லாமல் கர்நாடகாவில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வரவே முடியாது-சு.சுவாமி ஸ்டிராங் ஆதரவு

 உலக சுகாதார அமைப்பு

உலக சுகாதார அமைப்பு

இந்நிலையில் பல நாடுகளிலும் கடந்த சில மாதங்களாக குறைந்திருந்த வைரஸ் பாதிப்பு, இப்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 34 லட்சம் பேருக்கு புதிதாக வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது முந்தயை வாரத்துடன் ஒப்பிடுகையில் 12% ஆகும். கொரோனா பாதிப்பு இதே வேகத்தில் பரவினால் இன்னும் 3 வாரங்களில் உலகளாவிய வைரஸ் பாதிப்பு 20 கோடியை தொடும் என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். மறுபுறம் உயிரிழப்புகள் தொடர்ந்து குறைந்து வருவதாக குறிப்பிட்ட உலக சுகாதார அமைப்பு, ஒரு வாரத்தில் 57,000 பேர் கொரோனாவால் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளது.

 எந்த நாடுகள்

எந்த நாடுகள்

மேற்கு பசிபிக் நாடுகளிலும், ஐரோப்பிய நாடுகளிலும் வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக, இந்தோனேசியா, பிரிட்டன், பிரேசில், இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த ஒரு வாரத்தில் கணிசமாக அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இதனால் உலக நாடுகள் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் WHO வலியுறுத்தியுள்ளது.

 என்ன காரணம்

என்ன காரணம்

கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க இரண்டு விஷயங்கள் முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது. முதலில் உருமாறிய கொரோனா. இந்தியாவில் 2ஆம் அலை சமயத்தில் மோசமான பாதிப்பை ஏற்படுத்திய டெல்டா கொரோனா, இப்போது உலக நாடுகளிலும் பரவ தொடங்கியுள்ளன. இது வைரஸ் பரவலை மோசமாக்குகிறது. அதேபோல முன்கூட்டியே அறிவிக்கப்படும் தளர்வுகளும் வைரஸ் பாதிப்பை அதிகரிப்பதாக உலக சுகாதார அமைப்பு சுட்டிக் காட்டி.யுள்ளது.

Recommended Video

    After Coronavirus now Noronavirus spreads.. England records cases with the highly contagious Virus
     தடுப்பூசி பணிகள்

    தடுப்பூசி பணிகள்

    மேலும், இந்த ஆண்டின் இறுதிக்குள் அனைத்து நாடுகள் தங்கள் நாட்டின் 40% மக்களுக்கு வேக்சினை போட்டிருக்க வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது. அதேநேரம் உற்பத்தி குறைவாக இருப்பதால் பணக்கார நாடுகளுக்கு மட்டுமே வேக்சின் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கிறது. உலகளவில் இதுவரை 3 பில்லியன் பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது.. ஆனால் அதில் 1% குறைவாகவே ஏழை நாடுகளுக்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    World Health Organisation says there were more than 3.4 million new global cases of the coronavirus last week. UN health agency says the number of deaths is continuing to decline.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X