For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செத்து மடியும் மக்கள்.. வேகமாக பரவும் வைரஸ்.. சீனா மீது தொடுக்கப்பட்ட பயோ வாரா? வல்லுநர்கள் அச்சம்!

சீனாவில் வேகமாக பரவி வரும் கோரோனோ வைரஸுக்கு பின் பயோ வார் எனப்படும் உயிரியல் போர் காரணமாக இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.

Google Oneindia Tamil News

Recommended Video

    China Corona virus infection | உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்... நடுங்கும் நாடுகள்

    பெய்ஜிங்: சீனாவில் வேகமாக பரவி வரும் கோரோனோ வைரஸுக்கு பின் பயோ வார் எனப்படும் உயிரியல் போர் காரணமாக இருக்கலாம் என்று கூறுகிறார்கள். இதில் பன்னாட்டு சதி இருக்கலாம் என்றும் கூறுகிறார்கள்.

    சீனாவின் வுஹன் பகுதியில்தான் இந்த கோரோனா வைரஸ் தோன்றியுள்ளது. தற்போது மத்திய சீனா, ஹாங்காங் பகுதியில் இந்த வைரஸ் பரவி வருகிறது. இந்த கோரோனா வைரஸ் காரணமாக சீனாவில் 9 பேர் பலியாகி உள்ளனர். 450 பேர் கோரோனா வைரஸ் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    சீனாவின் வுஹன் பகுதியில்தான் இந்த கோரோனா வைரஸ் தோன்றியுள்ளது. இதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    என்ன வைரஸ்

    என்ன வைரஸ்

    இந்த வைரஸ் கோரோனோ வைரஸ் எனப்படும் வைரஸ் குடும்பத்தை சேர்ந்தது ஆகும். இந்த குடும்பத்தில் மொத்தம் 6 வைரஸ் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது புதிதாக ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, கோரோனோ வைரஸ் குடும்பத்தின் 7 வது வைரஸ் ஆகும். சீனாவை தாக்கிய சார்ஸ் நோய் கோரோனோ வைரஸ் மூலம் ஏற்பட்டது.

    எப்படிப்பட்ட வைரஸ்

    எப்படிப்பட்ட வைரஸ்

    கோரோனோ வைரஸ் ஒருவரை தாக்கினால் அவர்களுக்கு பல அடிப்படை பிரச்சனைகள் ஏற்படும். ஒருவரை பார்த்தால் அவர்களுக்கு கோரோனோ வைரஸ் தாக்குதல்தானா என்று முதலில் சொல்ல முடியாது. இதனால் ஜலதோஷம், உடல் வலி, இருமல், தும்மல், காய்ச்சல், நெஞ்சுவலி கடைசியில் மரணம் வரை ஏற்பட வாய்ப்புள்ளது. லேசான காய்ச்சலில்தான் இது தொடங்கும். தற்போது தாக்கி வரும் கோரோனோ வைரஸ் அப்படிப்பட்ட வைரஸ்தான்.

    மிக மோசம்

    மிக மோசம்

    ஆனால் இந்த கோரோனோ வைரஸ் கொஞ்சம் வலிமையானது. மிகவும் எளிதாக மக்களை தாக்கும். அதிக சக்தி படைத்தது. இதன் மூலம் மோசமான பாதிப்புகள் உடனே ஏற்படலாம். இதனால்தான் கோரோனோ வைரஸ் தாக்கிய ஒரே வாரத்தில் 9 பேர் சீனாவில் பலியாகி உள்ளனர்.

    உலகம் முழுக்க எமர்ஜென்சி

    உலகம் முழுக்க எமர்ஜென்சி

    இந்த வைரஸ் தாக்குதல் காரணமாக உலகம் முழுக்க மருத்துவ எமெர்ஜென்சி அறிவிக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. சார்ஸ், பன்றிக்காய்ச்சல், எபோலா ஆகிய நோய்கள் தாக்கிய போது, இதேபோல் உலக சுகாதார நிறுவனம் உலக அளவில் எமெர்ஜென்சி அறிவித்தது. தற்போது கோரோனோ வைரஸ் தாக்குதலுக்கும் அதேபோல் அறிவிக்க வாய்ப்புள்ளது. விரைவில் இது உலகம் முழுக்க பரவ வாய்ப்புள்ளது.

    எப்படி வந்தது

    எப்படி வந்தது

    இந்த கோரோனோ வைரஸ் எப்படி உருவானது என்று தெரியவில்லை. சீனாவின் உஹன் பகுதியில்தான் முதலில் இது தாக்கப்பட்டது. அங்கு இருக்கும் மீன் மார்க்கெட்டில் இது உருவாகி இருக்கலாம், அங்கிருந்து மக்களுக்கு பரவ வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது உறுதி செய்யப்படவில்லை.

    எப்படி பரவும்

    எப்படி பரவும்

    பொதுவாக இது விலங்கில்தான் உருவாகி இருக்கும். அதன்பின் ஒரு மனிதருக்கு பரவி இருக்கும். பின் அப்படியே பலருக்கு தொடுதல் மூலம், ஒன்றாக உண்பது மூலம், ஒரே பொருட்களை பயன்படுத்துவது மூலம் பரவி இருக்கும் என்கிறார்கள். இதனால் கோரோனோ வைரஸ் மிக வேகமாக பரவும் அபாயம் உள்ளது.

    சீனா ஏன்

    சீனா ஏன்

    சீனாவை இந்த கோரோனோ வைரஸ் தாக்குவதற்கு மக்கள் தொகை காரணம் என்கிறார்கள். அங்கு சுகாதாரம் குறைவு. கோரோனோ வைரஸ் ஏற்கனவே அங்கு தாக்கி உள்ளது. அதனால் புதிய எதிர்ப்பு சக்தியுடன் அங்கு கோரோனோ வைரஸ் உருவாகி இருக்கலாம். பொதுவாக வைரஸ்கள் முன்பு உருவான அதே இடத்தில்தான் உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    பெரிய குழப்பம்

    பெரிய குழப்பம்

    ஆனால் இந்த கோரோனோ வைரஸ் எப்படி உருவானது, உறுதியாக எதனால் உருவானது என்றும் தெரியவில்லை. திடீர் என்று கோரோனோ வைரஸ் உருவாகி மக்களை தாக்க தொடங்கி உள்ளது. இதற்கு பின் வேறு நாட்டின் சதி இருக்கலாமா என்று கேள்வி எழுந்துள்ளது. கோரோனோ வைரஸ் மூலம் சீனா மீது பயோ தாக்குதல் நடத்தப்படுகிறதா என்றும் அந்நாட்டு வல்லுநர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

    பயோ வார் ஏற்பட்டுள்ளதா?

    பயோ வார் ஏற்பட்டுள்ளதா?

    சீனா தற்போது வேகமாக முன்னேறி வருகிறது. இதனால் சீனாவின் வளர்ச்சியை தடுக்கும் வகையில், அங்கு வெளிநாட்டு மக்கள் செல்லாத வகையில், பொருளாதார சீர்குலைவை ஏற்படுத்தும் வகையில் இப்படி கோரோனோ வைரஸ் தாக்குதல் நடந்துள்ளது. இதற்கு பின் அண்டை நாடுகள் சதி இருக்கலாம். பன்னாட்டு சதி இருக்கலாம் என்றும் அந்நாட்டு வல்லுநர்கள் சந்தேகம் கொள்கிறார்கள்.

    சார்ஸ் ஏற்பட்டது

    சார்ஸ் ஏற்பட்டது

    இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. 2002ல் சீனா வேகமாக வளர்ந்து வந்தது. அப்போதும் அங்கே கோரோனோ வைரஸ் தாக்குதல் நிகழ்ந்து சார்ஸ் ஏற்பட்டது. இதனால் 774 பேர் இறந்தனர். 8098 பேர் பாதிக்கப்பட்டனர். இதனால் சீனாவின் பொருளாதாரம் மோசமாக பாதிக்கப்பட்டது. சீனாவின் வளர்ச்சி 10 ஆண்டுகள் தள்ளிப்போனது.

    உலகம் முழுக்க இப்படி

    உலகம் முழுக்க இப்படி

    தற்போதும் அதேபோல் சீனாவில் நிகழ வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.2012ல் மத்திய கிழக்கு நாடுகள் வேகமாக முன்னேறிய போது, அங்கு மெர்ஸ் எனப்படும் Middle East respiratory syndrome பரவியது. இதில் 858 பேர் பலியானார்கள். அப்போதும் மக்கள் இடையே பயோ வார் அச்சம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Sudden Coronavirus attack on China may be Bio War says Experts from the country.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X