For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நடுத்தெருவில் விழும் சடலங்கள்.. பிளாஸ்டிக் பைகளில் கட்டி எரிக்கும் கொடுமை.. நடுக்கத்தில் ஈகுவடார்

ஈகுவடாரில் சடலங்கள் நடுத்தெருவில் கிடக்கின்றன

Google Oneindia Tamil News

குயாகுவில்: நடுத்தெருவிலேயே விழுந்து கிடக்கின்றன சடலங்கள்.. பிளாஸ்டிக் பைகளில் இறந்த உடல்களை கட்டி வைத்து இருப்பதும், அவைகளை எரிக்க முடியாமல் மக்கள் திணறி வருவதும் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. ஈகுவடார் நாட்டில் இந்த கொடுமை நடந்து வருகிறது!

Recommended Video

    உதவி செய்வது போல நாடகம்... வெளியான சீனாவின் இன்னொரு முகம்

    தென் அமெரிக்காவின் வடமேற்கு முனையில் அமைந்துள்ளது ஈகுவடார்.. போதிய வளர்ச்சி அடையாத நாடு இது... வளர்ந்த நாடுகளையே விட்டு வைக்காத கொரோனா ஈகுவடாருக்கும் இரக்கம் காட்டவில்லை... இங்கு மட்டும் 3 ஆயிரத்து 465 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்... 172 பேருக்கும் மேல் உயிரிழந்துள்ளனர்.

    ஆனால் இந்நாட்டின் பெரிய நகரமான குவாகுவிலில் எப்படியும் 2,500 முதல் 3,500 பேர் வரை இறக்கலாம் என எதிர்ப்பார்ப்பதாக அதிபர் லெனின் ஏற்கனவே கூறி இருந்தார்.

    குழந்தைகளுக்கு நடுவே கணவரின் சடலம்.. கதறிய மனைவி.. ஈக்வடார் நாட்டில் நெஞ்சை பதற வைக்கும் காட்சிகள்!குழந்தைகளுக்கு நடுவே கணவரின் சடலம்.. கதறிய மனைவி.. ஈக்வடார் நாட்டில் நெஞ்சை பதற வைக்கும் காட்சிகள்!

    கொரோனா

    கொரோனா

    இதற்கு காரணம், ஈக்வடாரில் கொரோனா வைரஸ் பாதித்தோருக்கு டெஸ்ட் செய்ய போதிய மருத்துவ உபகரணங்கள் இல்லை என்கிறார்கள். அதனால்தான் பலி எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.. பாதிக்கப்பட்டவர்களை கண்காணிக்க நர்ஸ்களை நியமித்தால் அவர்களும் இறந்து வருகிறார்கள்.

    வீடியோ

    வீடியோ

    சில தினங்களுக்கு முன்புகூட ஒரு வீடியோ வெளியானது... அதில் கணவர் சடலம் தெருவிலேயே விழுந்து கிடக்கிறது.. அதனை எடுத்து செல்லுமாறு மனைவி அதிகாரிகளிடம் அழுதபடியே சொல்கிறார்.. ஆனால் அதிகாரிகளோ இப்போதைக்கு எதுவும் செய்ய முடியாது என்று மறுப்பு சொல்கிறார்கள்.. அந்த சடலத்தை சுற்றி சுற்றி அவரது குழந்தைகள் செய்வதறியாது திகைத்து வலம் வந்தனர்.. இதுபோன்ற நிலை இப்போதும் தொடர்கிறது.

    பிணங்கள்

    பிணங்கள்

    ஏராளமானோர் வீடுகளில் சடலத்தை வைத்துக் கொண்டு இருக்க முடியாமல், தெருவில் கிடத்தி உட்கார்ந்துள்ளனர்... பார்ப்பதற்கு மார்ச்சுவரி போலவே இருக்கிறது.. யாரும் சடலங்களை கொண்டு போகவும் வரவில்லை, எத்தனை நாள் பிணத்தை தெருவில் போட்டு கொண்டு இருப்பது என்றும் தெரியாமல் சிலர் அங்கேயே சடலங்களை எரிக்க ஆரம்பித்துவிட்டனர்.

    சாலையோரம் பிணம்

    சாலையோரம் பிணம்

    இப்படி நாள்கணக்கில் சடலங்களை வைத்திருப்பதாலும், பொதுவெளியில் எரிப்பதாலும் மேலும் வைரஸ் பரவும் அபாயமும் உள்ளது. இன்னொருபக்கம், இறந்தவர்களை அடக்கம் செய்ய யாருமே முன்வரவில்லை.. தங்களுக்கும் தொற்று வந்துவிடுமோ என பயந்துகொண்டுள்ளனர்.. அதனால் சிலல் சடலங்களை பிளாஸ்டிக் பைகளில் கட்டி வைத்து ஆஸ்பத்திரிக்கு வெளியிலேயே ரோட்டோரத்தில் போட்டுவிட்டு செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.

    பார்சல்

    பார்சல்

    இப்போதைக்கு ஏராளமானோர் ஆஸ்பத்திரிகளில் போதிய படுக்கை வசதி இல்லாத காரணத்தினால் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதில் ஒவ்வொருவராக இறந்தும் வருகின்றனர்.. பிளாஸ்டிக் பைகளில் உடல்களை கட்டி பார்சல் வைத்திருப்பதும், அடக்கம் செய்வதற்காக காத்திருப்பதும் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது!

    English summary
    coronavirus: Bodies are being left in the streets in an overwhelmed ecuador city
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X