சீனாவில் கைமீறிய கொரோனா.. 570ஐ தொட்ட பலி எண்ணிக்கை.. 28000 பேர் பாதிப்பு.. ஒரே நாளில் 73 பேர் பலி!
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலில் 73 பேர் ஒரே நாளில் பலியான சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
பெய்ஜிங்: சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலில் 73 பேர் ஒரே நாளில் பலியான சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸால் பலி எண்ணிக்கை 570 ஆக உயர்ந்துள்ளது
யாருமே நினைத்து பார்க்காத வேகத்தில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கொரோனா வைரஸ் சீனாவின் வுஹன் நகரத்தில் தோன்றிய கொடுமையான வைரஸ் ஆகும்.இது தொடுதல் மூலமாக ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவ கூடியது.
இந்த வைரஸ் காரணமாக எல்லா நோயாளிகளும் வுஹன் நகரத்தில் அடைத்து வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்கள். வுஹன் நகரத்தை விட்டு வைரஸ் வெளியே செல்ல கூடாது என்பதால் நோயாளிகள் எல்லோரையும் அங்கேயே வைத்து சோதனை செய்து வருகிறார்கள்.

எத்தனை நாடுகள்
வுஹன் நகரத்தில் இதற்காக 6 நாட்களில் பெரிய மருத்துவமனை கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. இங்கு 2000 பேர் வரை சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஆனால் இத்தனை செய்தும் இந்த வைரஸ் வெளியே சென்றுவிட்டது என்றுதான் கூற வேண்டும். சீனாவிற்கும் வெளியே அந்நாட்டில் 5 நகரங்கள் இதனால் மூடப்பட்டுள்ளது. மொத்தமும் 22 நாடுகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது.

இயற்கை பேரழிவு
இயற்கை பேரழிவு நடக்கும் போது என்ன நடக்குமோ அதேபோல்தான் தற்போதும் சீனாவில் நடந்து வருகிறது. நோய் பாதிக்கப்பட்ட வுஹன் நகரம் மொத்தமாக நிலைகுலைந்துள்ளது. அங்கு போலீஸ் கூட வெளியே செல்லவில்லை. அங்கு இதனால் பலர் தண்ணீர், உணவு இன்றி கடும் கஷ்டத்தில் இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் அங்கு நோய் தாக்கும் மக்கள் சாலையில் நடந்து கொண்டு இருக்கும் போதே சுருண்டு விழுகிறார்கள். சாலையிலும், மெட்ரோவில் சுருண்டு விழுந்து இவர்கள் உயிரை விட்டுள்ளனர். முக்கியமாக மெட்ரோக்களில் இந்த சம்பவம் அதிகம் நடந்துள்ளது.

பலி எண்ணிக்கை
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலில் 73 பேர் ஒரே நாளில் பலியான சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸால் பலி எண்ணிக்கை 570 ஆகி உயர்ந்துள்ளது. இந்த பிப்ரவரி மாத இறுதியில் பலி எண்ணிக்கை 2500ஐ தாண்டும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. அந்நாட்டு மக்களை இது அதிர்ச்சி அடைய செய்துள்ளது. மொத்தம் 28000 பேர் சீனாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர்.

நேற்று என்ன
நேற்று மட்டும் புதிதாக 4 ஆயிரம் பேர் இந்த நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த தாக்குதலை கட்டுப்படுத்த முடியவில்லை என்று அந்நாட்டு அரசு ஒப்புக்கொண்டுள்ளது. இதனால் கொரோனா குறித்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இனி வெளிநாடுகளுக்கு கொரோனா குறித்த தகவல்களை சீனா அதிகம் தெரிவிக்காது என்றும் கூறுகிறார்கள். இதை அந்நாடு பெரிய தோல்வியாக கருதுவது குறிப்பிடத்தக்கது.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications