For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சீனாவைவிட மற்ற நாடுகளில் 8 மடங்கு வேகமாக பரவும் கொரோனா வைரஸ்.. கவலையை எழுப்பிய உலக சுகாதார நிறுவனம்

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: சீனாவை காட்டிலும் மற்ற நாடுகளில் 8 மடங்கு வேகமாக கொரோனா வைரஸ் பரவி வருவதால் பலி எண்ணிக்கை குறித்து உலக சுகாதார நிறுவனம் கவலையை எழுப்பியுள்ளது.

Recommended Video

    Coronavirus spreads in 7 Middle East Countries

    சீனாவில் வுகான் நகரத்தில் உள்ள மீன் சந்தையிலிருந்து கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. கடந்த டிசம்பர் மாதம் முதல் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் சீனாவில் மட்டும் 3000-க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர்.

    89 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் சீனாவுக்கு வந்திருந்தோரிடமிருந்து 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இதனால் அமெரிக்காவில் இருவர் பலியாகிவிட்டனர். இந்த நிலையில் 24 மணிநேரத்தில் சீனாவை விட மற்ற நாடுகளில் கொரோனா வைரஸ் 8 மடங்கு பரவுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

    கொரோனா வைரஸ் பாதிப்புடன் பேருந்தில் பயணம் செய்த பெங்களூரு சாப்ட்வேர் என்ஜினியர்.. ஷாக் தகவல்கள் கொரோனா வைரஸ் பாதிப்புடன் பேருந்தில் பயணம் செய்த பெங்களூரு சாப்ட்வேர் என்ஜினியர்.. ஷாக் தகவல்கள்

    தென் கொரியா

    தென் கொரியா

    இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரியேசூஸ் கூறுகையில், கடந்த 24 மணி நேரத்தில் சீனாவை விட மற்ற நாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. 8 மடங்கு வேகமாக பரவுவதால் உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகளவில் இருக்கும். தென்கொரியா, இத்தாலி, ஈரான், ஜப்பான் ஆகிய நாடுகள் கவலையை ஏற்படுத்தியுள்ளது. பலி எண்ணிக்கை உயரும் அபாயம் இருப்பதை உலக சுகாதார நிறுவனம் சுட்டிக் காட்டியுள்ளது.

    அமெரிக்கா பயண கட்டுப்பாடு

    அமெரிக்கா பயண கட்டுப்பாடு

    இந்த நாடுகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தென் கொரியாவிற்கு வரும் பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றார். இதுகுறித்து அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் கூறுகையில் தென் கொரியா மற்றும் இத்தாலியில் உள்ள விமான நிலையங்களில் 12 மணி நேரத்தில் அனைத்து பயணிகளுக்கும் கொரோனா வைரஸ் சோதனை நடத்தப்படும். இதனால் அமெரிக்கா பயண கட்டுப்பாட்டை நீட்டிக்கும் என்றார்.

    ஈரான்

    ஈரான்

    இத்தாலியில் பலி எண்ணிக்கை 18-லிருந்து 52 ஆக உயர்ந்துள்ளது. 60-க்கும் மேற்பட்ட நாடுகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதை முதல் முறையாக லட்வியா, சவுதி அரேபியா, செனேகல், மொராக்கோ ஆகிய நாடுகளில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையால் அறிய முடிந்தது. ஈரானில் கொரோனா மோசமாக பரவியுள்ளது.

    மருந்து தட்டுப்பாடு

    மருந்து தட்டுப்பாடு

    அங்கு 1,501 பேருக்கு நோய் பாதிப்பு இருக்கிறது. 66 பேர் பலியாகிவிட்டனர். ஈரானில் உள்ள மருந்து கடைகளில் கையுறை, மருந்துகள் தட்டுப்பாடு நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தென் கொரியாவில 26 பேர் பலியாகிவிட்டனர். 599 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களுள் 377 தேகு நகரத்தை சேர்ந்தவர்கள். இங்கு சீனாவின் கிளையான சின்சியோன்ஜி சர்ச் ஆப் ஜீசஸ் என்ற தேவாயலம் உள்ளது. இதே போன்ற தேவாலயம் சீனாவின் வுகானிலும் உள்ளது.

    English summary
    Corona virus is spreading 8 times faster in other countries than in China. World Health Organisation raises concern about Death toll.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X