For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உணவில் பரவும் வைரஸ்.. ஜப்பான் கப்பலில் நடக்கும் கொடூரம்.. கொரோனா பீதியில் தத்தளிக்கும் 3500 பேர்!

கொரோனா வைரஸ் காரணமாக ஜப்பானில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் கப்பலில் உணவு மூலமாக கூட வைரஸ் பரவ வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

Google Oneindia Tamil News

Recommended Video

    கொரோன அச்சுறுத்தல்... நடுக் கடலில் கப்பலில் தவிக்கும் 200 இந்தியர்கள்!

    டோக்கியோ: கொரோனா வைரஸ் காரணமாக ஜப்பானில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் கப்பலில் உணவு மூலமாக கூட வைரஸ் பரவ வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

    ஜப்பானில் கப்பல் ஒன்று கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக நடுக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கார்னிவல் ஜப்பான் நிறுவனத்திற்கு சொந்தமான கப்பல் ஆகும் இது. முதலில் ஒருவருக்குதான் கொரோனா வைரஸ் தாக்குதல் இருந்தது.

    இந்த கப்பலில் 3500 பேர் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. டயமண்ட் பிரின்சஸ் என்பது இந்த கப்பலின் பெயர். ஜப்பானில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் கப்பலில் உள்ள மொத்தம் 72 பேருக்கு வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது.

    எத்தனை பேர்

    எத்தனை பேர்

    இந்த வைரஸ் உணவு மூலம் பரவ வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். அங்கு நோய் பாதிக்கப்பட்ட எல்லோரும் தனியாகவே வைக்கப்பட்டுள்ளனர்.அவர்கள் உடன் மற்றவர்கள் யாரும் தொடர்பில் இல்லை. ஆனால் அதையும் மீறி வைரஸ் வேகமாக பரவி வருகிறது. முதலில் ஒருவருக்கு ஏற்பட்டு பின் 10 பேருக்கு ஏற்பட்டு தற்போது 72 பேருக்கு இந்த வைரஸ் தாக்குதல் ஏற்பட்டு இருக்கிறது.

    எப்படி பரவுகிறது

    எப்படி பரவுகிறது

    ஒருவரை ஒருவர் தொடாமலே இப்படி வைரஸ் வேகமாக பரவுவது எப்படி என்று பலரும் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். இதற்கு மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். அதன்படி இந்த கொரோனா வைரஸ் சாதாரண இடங்களில் 2 வாரம் வரை இருக்கும். வைரஸ் உள்ளவர் தொட்ட பொருட்களில் இந்த வைரஸ் இரண்டு வாரம் வரை வாழ வாய்ப்புள்ளது. அதை நாம் தொட்டால் நமக்கும் வைரஸ் பரவும்.

    சீனா எப்படி

    சீனா எப்படி

    இப்படித்தான் சீனாவில் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அதேபோல்தான் அந்த கப்பலிலும் மக்களுக்கு வைரஸ் பரவி இருக்க வாய்ப்புள்ளது. அதாவது வைரஸ் தாக்கியவர்கள் கப்பலில் தொடும் பொருட்களை தொடும் நபர்களுக்கு எல்லாம் இந்த வைரஸ் பரவ வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இது உணவு மூலமும் பரவி இருக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

    இதுதான் காரணம்

    இதுதான் காரணம்

    அங்கு மொத்தம் 1000 பணியாளர்கள் இருக்கிறார்கள். இதில், 11 ஊழியர்களுக்கு இந்த நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இவர்கள் சமையல் செய்த போது அதன் மூலம் மற்ற நபர்களுக்கும் நோய் தாக்குதல் ஏற்பட்டு இருக்கலாம். அவர்கள் செய்த உணவு மூலம் பலருக்கும் கொரோனா வைரஸ் பரவி இருக்கலாம் என்று கூறுகிறார்கள். இதனால் அந்த கப்பலில் இருக்கும் மக்கள் பெரும் பீதியில் இருக்கிறார்கள்.

    English summary
    Coronavirus may spread through the food too in the secluded Japan ship with 3500 passengers.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X