For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அவர் சொன்னதை செய்து இருந்தால்.. கொரோனாவை தடுத்து இருக்கலாம்.. லீயிடம் மன்னிப்பு கேட்ட சீனா.. ஏன்?

சீனாவில் கொரோனா வைரஸை முதல் முதலில் கண்டுபிடித்து எச்சரிக்கை விடுத்த டாக்டர் லீயிடம் சீன அரசு மன்னிப்பு கேட்டு இருக்கிறது.

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: சீனாவில் கொரோனா வைரஸை முதல் முதலில் கண்டுபிடித்து எச்சரிக்கை விடுத்த டாக்டர் லீயிடம் சீன அரசு மன்னிப்பு கேட்டு இருக்கிறது.

சீனாவில் கொரோனா வைரஸ் அரசின் கணக்குப்படி கடந்த ஜனவரி மாதம் முதல் வாரத்தில்தான் பரவியது. அப்போதுதான் அரசு கணக்குபாடி அங்கு வைரஸ் பரவியது. ஆனால் உண்மையில் அங்கு வைரஸ் டிசம்பர் இரண்டாம் வாரத்திலேயே தொடங்கிவிட்டது.

ஆம் டிசம்பர் இரண்டாம் வாரத்திலேயே அங்கு இந்த வைரஸ் தாக்குதலால் ஒருவர் பலியானார். சீனாவின் வுஹன் பகுதியை சேர்ந்த சேர்ந்த லி வென்லியாங் என்ற மருத்துவர் இந்த கொரோனா வைரஸ் தாக்குதலை டிசம்பர் மாத தொடக்கத்திலேயே கண்டுபிடித்துவிட்டார்.

என்ன செய்தார்

என்ன செய்தார்

சீனாவில் இருக்கும் வுஹன் மத்திய மருத்துவமனையில்தான் லி வென்லியாங் வேலை செய்தார். அங்குதான் முதலில் வைரஸ் பரவியது. இவர் அங்கு பணியாற்றும் போது டிசம்பர் முதல் வாரத்தில், காய்ச்சலுடன் நிறைய பேர் அனுமதி ஆகியுள்ளார். இவர்களில் 8 பேருக்கு ஒரே மாதிரியான வைரஸ் தாக்கி இருக்கிறது.இந்த வைரஸை சோதித்த லி வென்லியாங் அது சார்ஸ் உருவாக காரணமாக இருந்த கொரோனா வைரஸ் குடும்பத்தை சேர்த்த வைரஸ் போலவே இருந்ததை கண்டுபிடித்துள்ளார்.

எச்சரிக்கை விடுத்தார்

எச்சரிக்கை விடுத்தார்

இது தொடர்பாக அவர் அரசுக்கு எச்சரிக்கையும் விடுத்தார். அதோடு உடனடியாக அவர் மருத்துவர்கள் இருக்கும் வாட்ஸ் ஆப் குழு ஒன்றில் அந்த செய்தியை பகிர்ந்துள்ளார். லி வென்லியாங் அளித்த மெடிக்கல் ரிப்போர்ட்களை பார்த்து, சீன மருத்துவர்கள் பலர் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். அதேபோல் சமூக வலைத்தளத்திலும் இது தொடர்பாக செய்தி வெளியிட்டு, மக்களுக்கு இவர்தான் உண்மையை அறிவித்தார்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் சீனா அரசு உடனே இவரை முடக்கியது. இவருக்கு எதிராக சீன அரசு வழக்கு தொடுத்தது. இந்த வைரஸ் குறித்து எதுவும் பேச கூடாது. யாரிடமும் விவாதிக்க கூடாது. சமுக வலைத்தளங்களில் குறிப்பிட கூடாது என்று எச்சரித்துள்ளனர். அதோடு அவரிடம் இது தொடர்பாக ஒப்பந்தம் ஒன்றிலும் கையெழுத்து வாங்கி இருக்கிறார்கள். ஆனால் சில நாட்களில் இவருக்கும் கொரோனா ஏற்பட்டது.

பலியானார்

பலியானார்

ஜனவரி 10ம் தேதி லி வென்லியாங் காய்ச்சல் வந்து படுத்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன் கொரோனா தாக்கப்பட்ட பெண் ஒருவருக்கு அவர் சிகிச்சை அளித்துள்ளார். அதன்பின் இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதன்பின் பிப்ரவரி 7ம் தேதி கொரோனா வைரஸால் இவர் தாக்கப்பட்டு பலியானார். இவரை தற்போது சீன மக்கள் தங்களின் ஹீரோ போல கொண்டாடி வருகிறார்கள்.

என்ன மன்னிப்பு

என்ன மன்னிப்பு

தற்போது இவரிடம் சீன அரசு மன்னிப்பு கேட்டுள்ளது. ஆம், இது தொடர்பாக வுஹன் போலீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், லி வென்லியாங்தான் எங்களுக்கு கொரோனா குறித்து முதலில் சொன்னவர். ஆனால் அவர் பேச்சை நாங்கள் கேட்கவில்லை. அவர் பேச்சை மதிக்காமல் நாங்கள் அவர் மீது வழக்கு பதவி செய்தோம். நாங்கள் செய்த தவறு இது. இதை இனி எங்களால் மாற்ற முடியாது.

முடியவில்லை

முடியவில்லை

அவர் சொன்ன போதே நாங்கள் துரிதமாக செயல்பட்டு இருக்க வேண்டும். உடனே செயல்பட்டு இருந்தால் நாங்கள் வைரஸ் பரவுவதை தடுத்து இருக்க முடியும். பலர் பலியாகி இருக்க மாட்டார்கள். ஆனால் முடியாமல் போய்விட்டது. மக்களுக்காக உயிர் துறந்த ஹீரோ லி வென்லியாங்கிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். அதேபோல் அவரின் குடும்பத்திடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். அவருக்கு எதிரான வழக்கை வாபஸ் வாங்கிறோம் என்று, சீன அரசு கூறியுள்ளது.

English summary
Coronavirus: The government apologies to The Chinese doctor who found the attack first and warned.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X