சீனாவை வாட்டி எடுக்கும் டெல்டா வகை கொரோனா.. தவிக்கும் அதிபர் ஜின்பிங்! என்னதான் நடக்கிறது?
பெய்ஜிங்: சீனாவில் டெல்டா வகை கொரோனா கேஸ்கள் வேகமாக பரவ தொடங்கி உள்ளது. இதனால் தினசரி கேஸ்கள் மீண்டும் அங்கு அதிகரித்து வருகின்றன.
உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் மூன்றாம் அலை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்தது போலவே ஐரோப்பா நாடுகளிலும், மத்திய ஆசிய நாடுகளிலும் தினசரி கேஸ்கள் உச்சம் தொட்டுள்ளது.
ரஷ்யா, துருக்கி, அமெரிக்கா, யு.கே என்று பல நாடுகளில் தீவிரமாக கொரோனா கேஸ்கள் பரவி வருகின்றன. முக்கியமாக அமெரிக்காவில் தினசரி கேஸ்கள் 60 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருகிறது.

கொரோனா கேஸ்கள்
அதேபோல் சீனாவிலும் தினசரி கேஸ்கள் கடந்த ஒரு மாதமாக அதிகரித்து வருகிறது. மற்ற நாடுகளை போல 50 ஆயிரம், 60 ஆயிரம் என்ற அளவிற்கு சீனாவில் கேஸ்கள் பதிவாகவில்லை. ஆனால் தினசரி கேஸ்கள் 100-200 என்ற அளவில் பதிவாகி வருகிறது. இதில் என்ன சிக்கல் என்றால் இந்த கேஸ்கள் எல்லாம் லோக்கலாக பரவும் கேஸ்கள். அதாவது உள்ளூர் மக்களிடையே பரவுகிறது.

வெளிநாடு
வெளிநாடு சென்றுவிட்டு வந்தவர்களிடம் கொரோனா ஏற்பட்டால் அதற்கு காரணம் இருக்கும். ஆனால் இந்த கேஸ்கள் உள்ளூர் அளவில் பரவுகிறது. இதனால் இந்த புதிய கேஸ்களில் சோர்ஸ் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. எங்கிருந்து, யாரிடம் இருந்து திடீரென இப்படி கொரோனா கேஸ்கள் பரவுகிறது என்று பலத்த சந்தேகத்தை இது ஏற்படுத்தி உள்ளது.

திணறல்
சீனா இதில் அதிகம் கவலையடைய காரணம் அந்த நாடு ஜீரோ கொரோனா விதியை (zero-tolerance guidance) பயன்படுத்தி வந்தது. அதாவது உள்ளூர் அளவில் ஒரு கொரோனா கேஸ் கூட பரவாமல் இருக்கும் வகையில் சீனா கட்டுப்பாடுகளை விதித்து வந்தது. ஆனால் அதையும் மீறி சீனாவில் லோக்கல் கொரோனா பரவல் ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் சீனாவில் 1308 லோக்கல் கேஸ்கள் வந்துள்ளன.

டெல்டா
சீனாவில் திடீரென இப்படி கொரோனா கேஸ்கள் அதிகம் பரவ டெல்டா வகை கொரோனா கேஸ்கள் காரணம் ஆகும். அங்கு புதிதாக ஏற்பட்ட 1308 லோக்கல் கொரோனா கேஸ்களில் 1280 டெல்டா வகை கொரோனா ஆகும். அதாவது சீனாவிற்குள் பல மாகாணங்களில் டெல்டா வகை கொரோனா பரவுகிறது. இதன் சோர்ஸ் என்ன என்றும் தெரியவில்லை.

குழப்பம்
சீன அதிபர் ஜி ஜின்பிங் தொடங்கி எல்லோரும் இதில் குழப்பத்தில் இருக்க காரணமே இது எப்படி பரவுகிறது என்பதால்தான். ஏனென்றால் அங்கு 21 மாகாணங்களில் இந்த பரவல் ஏற்பட்டுள்ளது. இது அனைத்திற்கும் ஒரே சோர்ஸ் இருக்க முடியாது. அப்படி என்றால் இந்த 21 மாகாணங்களில் வேறு வேறு சோர்ஸ் இருக்க வேண்டும். இவ்வளவு டெல்டா வகை சோர்ஸ்கள் இருக்கிறது என்றால் அது மிக ஆபத்தானவிஷயம்.

அதிர்ச்சி
இதனால் அனைத்து மாகாணங்களிலும் பரவலுக்கான காரணத்தை சீனா தேடி வருகிறது. அங்கு தற்போது 30க்கும் மேற்பட்ட நகரங்களில் லாக்டவுன் போடப்பட்டுள்ளது. ரிஸ்க் உள்ள இடங்களில் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. பல இடங்களில் மால்கள் மூடப்பட்டு சுற்றுலா தலங்கள் சீல் வைக்கப்பட்டு உள்ளது. இரண்டாம் அலையில் இருந்து தப்பித்த சீனா தற்போது டெல்டாவிடம் திணற தொடங்கி உள்ளது.
-
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications