For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என்னாது 12 ரூபாய்க்கு வீடா?.. அந்த தெரு என்ன விலைன்னு கேளு.. அய்யோ.. இப்ப நான் எதாச்சும் வாங்கணுமே!

Google Oneindia Tamil News

ஹங்கேரி: ஆஸ்ட்ரோ- ஹங்கேரியில் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக யாரும் வாங்காமல் கைவிடப்பட்ட வீடுகள் ரூ 12 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஐரேப்பாவில் சிறிய நகரம் குரோடியா. இந்த நகரத்தைச் சுற்றி பசுமையான வயல்களும் காடுகளும் இருக்கும். இங்கு 2,250 குடியிருப்புகள் உள்ளன.

70 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த குடியிருப்புகளைவிட 50 சதவீதமே தற்போது இருக்கிறது. இந்த நகரத்தில் மக்கள்தொகை படிப்படியாக குறைந்து வருவகிறது.

எல்லை

எல்லை

இதனால் புதியவர்களை ஈர்க்கும் வகையில் இங்கு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்கள். இதுகுறித்து அந்த நகரத்தின் மேயர் இவான் சபோலிக் கூறுகையில் நாங்கள் சில நாடுகளுடன் எல்லையை பகிர்ந்துள்ளோம்.

கணிசமாக குறைவு

கணிசமாக குறைவு

தற்போது மக்கள்தொகை கணிசமாக குறைந்து வருகிறது. இதை அதிகரிக்க முதல் முயற்சியாக 19 காலி வீடுகள் மற்றும் கைவிடப்பட்ட கட்டுமான பணியிடங்களை அடையாளம் கண்டு அவை ஒன்றுக்கு தலா ஒரு குனா(அந்நாட்டு கரென்சி) அமெரிக்க டாலரில் $0.16 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

25 ஆயிரம் குனா

25 ஆயிரம் குனா

இதுவரை 17 சொத்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. விற்பனையாகும் வீடுகளில் சிறிய சிறிய பழுதுநீக்கங்களை செய்து கொண்டால் போதும். வீடுகளை வாங்கும் நபர்கள் ஏதேனும் புதுப்பிக்க விரும்பினால் 25 ஆயிரம் குனா செலுத்த நகராட்சி முடிவு செய்துள்ளது.

20 சதவீதம்

20 சதவீதம்

அது போல் வீட்டை வாங்கும் புதிய குடியிருப்பாளர்களுக்கு 20 சதவீதம் விலையை அல்லது 35 ஆயிரம் குனா வரை நகராட்சியே ஈடு செய்யும். இதுகுறித்து செய்தித்தாள்களில் வெளியானவுடன் எங்கள் நகரத்திற்கு தொலைதூரத்தில் உள்ளவர்கள் கூட வீடு வாங்குவது குறித்து விசாரிக்கிறார்கள்.

கொலம்பியா

கொலம்பியா

இதுவரை ரஷ்யா, உக்கரைன், துருக்கி, அர்ஜென்டினா அல்லது கொலம்பியா நாடுகளில் இருந்து விலை கேட்கிறார்கள். எனினும் குரோட்டியாவில் குடியேற்றம் என்பது சிக்கலான விஷயமாகும். அதனால் உள்ளூர் மக்கள் யாராவது விலைக்கு கேட்டால் அவர்களுக்கு கொடுக்க நினைக்கிறோம். இங்கு வேலைவாய்ப்புகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்றார்.

15 ஆண்டுகள்

15 ஆண்டுகள்

இந்த நகரத்தில் டேனிஜெல் ஹார்ம்னிகார் வீட்டை வாங்கியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் வாடகை வீட்டில் இருப்பதற்கு பதில் சொந்த வீட்டில் வாழ்வது மிகவும் நன்றாக இருக்கிறது. ஒரு 15 ஆண்டுகளுக்கு நாங்கள் இங்கு தங்க முடிவு செய்துள்ளோம். இங்கிருந்து நகரும் எண்ணம் இல்லை என்றார்.

English summary
Croatian town is trying to lure resident for abandoned house for just Rs 12.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X