For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லீவு போடுங்க... எங்கேயாச்சும் ஓடுங்க.. "ஜாலியா" இருந்துட்டு வாங்க.. கெஞ்சிக் கேட்கும் டென்மார்க்

Google Oneindia Tamil News

கோபன்ஹேகன்: கொஞ்ச நேரம் "ஜாலியா" இருக்கலாம்னா எங்க முடியுது... நம்ம ஊரில் இந்த மாதிரியான "முனகல்கள்"தான் அதிகம். ஆனால் டென்மார்க்கிலோ "அந்த" மாதிரியான முனகல் சத்தம் அதிகமாக ஒலிக்க வேண்டும் என்று அரசாங்கமே லீவு கொடுத்து தனது நாட்டு மக்கள் ஜாலியாக இருக்க ஏற்பாடு செய்து தருகிறதாம்.

இந்தியாவிலும், சீனாவிலும் மக்கள் தொகை பல்கிப் பெருகி டன்லப் டயர் போல வீங்கிக் கொண்டுள்ளது. மறுபக்கம் டென்மார்க் போன்ற நாடுகளில் மக்கள் தொகை படு வேகமாக குறைந்து வருகிறது.

பிறப்பு விகிதம் மிகவும் சரிவை நோக்கிப் போய்க் கொண்டிருப்பதால் தனது நாட்டைக் காப்பாற்றும் முயற்சியில் டென்மார்க் அரசு இறங்கியுள்ளது. தனது நாட்டு மக்கள் அதிக அளவில் செக்ஸில் ஈடுபடுமாறு அது கோரிக்கை விடுத்து வருகிறது.

உலகிலேயே மகிழ்ச்சியான நாடு

உலகிலேயே மகிழ்ச்சியான நாடு

உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியான நாடு என்ற பெருமை டென்மார்க்குக்கு உண்டு. ஆனால் இங்கு பிறப்பு விகிதம் மிக மிக குறைவு. வருடத்திற்கு 1000 பேருக்கு 10 குழந்தைகள்தான் பிறக்கிறதாம்.

நார்டிக் பிராந்தியத்திலேயே மிக மோசம்

நார்டிக் பிராந்தியத்திலேயே மிக மோசம்

நார்டிக் பிராந்தியம் எனப்படும் (டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே, ஸ்வீடன் ஆகிய நாடுகளை உள்ளிடக்கியது இந்த நார்டிக் பிராந்தியம்) இந்த ஐந்து நாடுகளில் டென்மார்க்கில்தான் பிறப்பு விகிதம் கவலைக்கிடமாக உள்ளதாம்.

தீவுகள் பரவாயில்லையே

தீவுகள் பரவாயில்லையே

இந்தப் பிராந்தியத்திற்குட்பட்ட கிரீன்லாந்து, ஆலந்து தீவுகள், பாரோ தீவுகள் ஆகிய தீவுப் பகுதிகளை விட டென்மார்க்கில் பிறப்பு விகிதம் குறைவாக இருப்பது டென்மார்க் அரசை கவலைக்குள்ளாக்கியுள்ளது.

முதியோர்கள் அதிகரிப்பு

முதியோர்கள் அதிகரிப்பு

பிறப்பு விகிதம் அடியோடு குறைந்து வருவதால் முதியோர்கள் எண்ணிக்கை டென்மார்க்கில் விஸ்வரூபம் எடுத்து வருகிறதாம். ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் இதே நிலைதான்.

போங்கப்பா போங்க...

இதையடுத்து டென்மார்க் அரசு தனது நாட்டு குடிமக்களை அதிக அளவில் செக்ஸில் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்ள ஆரம்பித்துள்ளது. இதற்காக விடுமுறை உள்ளிட்ட சலுகைகளையும் அது அறிவித்து வருகிறது.

English summary
Danish people have been asked to go on holiday to have more sex to save the country. The appeal has come in the backdrop of low birth rate in the country. Denmark, considered as the happiest country in the world has a low birth rate, with 10 children being born per 1,000 people every year, the lowest in the Nordic region.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X