அஸ்பிரின் மருந்து எடுத்துக்காதீங்க.. ரத்தப்போக்கு அதிகரிக்குமாம்.. ஆய்வாளர்கள் பகீர் எச்சரிக்கை

Posted By:
Subscribe to Oneindia Tamil

லண்டன்: அஸ்பிரின் மருந்து நல்லது என்றும் பக்கவிளைவுகள் அதிகம் என்றும் பல வகையான செய்திகள் வெளி வந்து கொண்டே இருக்கின்றன.

சமீபத்தில் மருத்துவ ஆய்விதழான லான்செட்டில் அஸ்பிரின் மருந்து குறித்து ஓர் ஆய்வு கட்டுரை வெளியாகியுள்ளது.

இதில், நாம் இதுவரை கருதப்பட்டதை விட அஸ்பிரின் மருந்தை எடுத்துக் கொள்வதால் ஆபத்து அதிகம் என்று கூறப்பட்டுள்ளது.

இதய நரம்புகளில் ரத்த ஓட்டம்

இதய நரம்புகளில் ரத்த ஓட்டம்

பொதுவாக இதயத்திற்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் நரம்புகளில் தடை ஏற்படுவதாலேயே மாரடைப்பு ஏற்படக் கூடும். அஸ்பிரின் மருந்து இதய நரம்புகளில் தடை ஏற்படுவதை தடுப்பதாக மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதயத்திற்கு இதம்

இதயத்திற்கு இதம்

அஸ்பிரின் மருந்தை எடுத்துக் கொள்வதால் மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய் ஏற்படாமல் தடுக்க முடியும் என்று மருத்துவ உலகம் நமக்கு சொல்லி வந்துள்ளது. உலகில் உள்ள கோடான கோடி இதய நோயாளிகளும் இந்த மருந்ததை உயிர் காக்கும் என நம்பி இதுவரை அருந்தி வந்தனர்.

பக்க விளைவுகள்

பக்க விளைவுகள்

அதே வேளையில், அஸ்பிரின் மருந்து அன்றாடம் எடுத்துக் கொள்வோருக்கு வயிற்றுப் புண் உள்ளிட்ட பக்கவிளைவுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அதே போன்று சர்க்கரை நோய் உள்ளவர்கள் மற்றும் ரத்தப் போக்கு உள்ளவர்களுக்கு அஸ்பிரின் மருந்து பலனளிக்கவில்லை என்று ஏற்கனவே கூறப்பட்டு வந்தன.

ஆய்வு கட்டுரை

ஆய்வு கட்டுரை

இந்த நிலையில், லான்செட் என்ற மருத்துவ ஆய்வு பத்திரிகையில் வெளியாகியுள்ள கட்டுரையில் அஸ்பிரின் மருந்து எடுத்துக் கொள்வோருக்கு வயிற்றில் ரத்தப் போக்கு ஏற்படும் அபாயம் அதிகம் என்று கூறப்பட்டுள்ளது.

எச்சரிக்கை

எச்சரிக்கை

குறிப்பாக, இந்த ஆபத்து 75 வயதுக்கும் மேற்பட்டோருக்கு அதிகம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், அஸ்பிரின் மருந்தை எடுத்துக் கொள்வோர் வயிற்றுப் பாதுகாப்பிற்கான கூடுதல் மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
75 year old, who taking aspirin every day, will affect stomach bleeds, said Researchers.
Please Wait while comments are loading...