பரிசுப் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய துபாய் இந்திய துணை தூதரிடம் மனு

Posted By:
Subscribe to Oneindia Tamil

துபாய்: வெளிநாடுகளில் இருந்து அனுப்பும் பரிசுப் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்யக்கோரி துபாய் ஈமான் கல்சரல் சென்டர் சார்பில் இந்திய துணை தூதரிடம் மனு அளிக்கப்பட்டது.

துபாய் இந்திய துணை தூதராக விபுல் புதிதாக பொறுப்பேற்றுள்ளார். அவரை ஈமான் கல்சுரல் சென்டரின் நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Dubai Eeman center urges to cancel the GST tax for gift items from abroad

இந்த சந்திப்பில் ஈமான் கல்சுரல் சென்டரின் தலைவர் அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபிபுல்லா கான், பொதுச்செயலாளர் ஏ. ஹமீது யாசின், பொருளாளர் அப்துல் உபூர் மற்றும் மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத் ஆகியோர் பங்கேற்றனர்.

அப்போது ஈமான் கல்சுரல் சென்டரின் தலைவர் அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபிபுல்லா ஈமான் அமைப்பு செய்து வரும் கல்வி மற்றும் சமுதாயப் பணிகள் குறித்து விவரித்தார். மேலும் இந்திய துணை தூதரகம் மேற்கொண்டு வரும் சமுதாய மேம்பாட்டுப் பணிகளுக்கு ஈமான் அமைப்பு ஒத்துழைப்பு அளிக்கும் என தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து ஈமான் அமைப்பின் சார்பில் கோரிக்கை மனு ஒன்று அளிக்கப்பட்டது. அந்த கோரிக்கை மனுவில் அமீரகத்தில் இருந்து இந்தியர்கள் தங்களது சொந்த ஊரில் வசித்து வரும் உறவுகளுக்கு 20,000 ரூபாய் மதிப்புள்ள பொருட்களை எவ்வித வரியும் இன்றி அனுப்பி வந்தனர். ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் 40 சதவீதத்துக்கும் அதிகமான வரிவிதிப்பு இருந்து வருகிறது.

இதன் காரணமாக அமீரகத்தில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள் மிகவும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக அவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தங்களது சொந்த ஊருக்கு செல்கின்றனர். இதனால் அவர்கள் அன்பளிப்பு பொருட்களை அனுப்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே வரிவிதிப்பை ரத்து செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதனைக் கவனமுடன் கேட்ட இந்திய துணைத் தூதர் விபுல், இந்த கோரிக்கை குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சகத்துடன் பேசி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். ஈமான் அமைப்பு சார்பில் இந்திய துணை தூதர் விபுல் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டார்.

இந்த சந்திப்பை தொடர்ந்து இந்திய துணை தூதரகத்தில் பணிபுரிந்து வரும் தமிழகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் சுமதி வாசுதேவ், ராஜு உள்ளிட்டோரையும் சந்தித்து ஈமான் அமைப்பின் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Dubai Eemaan cultural center given petition to Indian Ambassador. They urged Indian Ambassador to cancel the GST tax for gift items from abroad.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற