துபாய்: இந்து சகோதரருக்கு இறுதிச் சடங்கு செய்த இஸ்லாமிய அமைப்பு
துபாய் : துபாயில் இறந்து போன தமிழகத்தைச் சேர்ந்த ஜெயராமனின் உடலுக்கு இஸ்லாமிய அமைப்பான ஈமான் அமைப்பின் முயற்சியில் 16.04.2014 புதன்கிழமை துபாய் ஜெபல் அலி மயானத்தில் இறுதிச் சடங்கு நடைபெற்றது.
துபாயில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் இறந்து எவ்வித தகவலும் இன்றி துபாய் மருத்துவமனை பிணவறையில் ஜெயராமன் உடல் வைக்கப்பட்டு இருந்தது.

துபாயில் உள்ள இந்திய துணை தூதரகத்தின் உதவியுடன் ஈமான் அமைப்பு கடலூர் மாவட்டத்திலுள்ள ஜெயராமன் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து அவரது உடலை துபாயிலேயே இந்து மத சம்பிரதாயப்படி இறுதிச்சடங்கு நடத்த ஈமான் அமைப்பின் துணைப் பொதுச்செயலாளர் ஏ. முஹம்மது தாஹா மற்றும் மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத் ஆகியோருக்கு அனுமதிக் கடிதம் அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து 16.04.2014 புதன்கிழமை காலை துபாய் ஜெபல் மலி மயானத்தில் இறுதிச் சடங்கு நடைபெற்றது.
இறுதிச் சடங்கில் ஈமான் துணைப் பொதுச்செயலாளர் ஏ முஹம்மது தாஹா, மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத், விழாக்குழு செயலாளர் கீழை ஹமீது யாசின், முஹம்மது உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மறைந்த ஜெயராமனின் ஊரைச் சேர்ந்த இளவரசன் இந்து மத சம்பிரதாயங்களை நிறைவேற்றினார். அவரிடம் துபாய் காவல் துறையினர் ஜெயராமன் இறந்தபோது வைத்திருந்த பணம், கடிகாரம் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications