For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உக்ரைனில் விமான பயணிகளின் சடலங்கள் அவமதிப்பு: நெதர்லாந்து பிரதமர் மார்க் கடும் அதிர்ச்சி

By Siva
Google Oneindia Tamil News

ஹேக்: உக்ரைனில் சுடப்பட்ட மலேசிய விமானத்தில் பயணம் செய்தவர்களின் உடல்களை தரதரவென இழுத்துச் சென்றது, டிரக்குகளில் உடல்களை போட்டது பற்றி நெதர்லாந்து பிரதமர் மார்க் ரட் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.

நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு 298 பேருடன் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச்.17 உக்ரைனில் பக் ஏவுகணை வீசித் தாக்கப்பட்டது. இதில் விமானத்தில் இருந்த 298 பேரும் பலியாகினர்.

விமானம் விழுந்த இடத்தில் மீட்பு பணிகள் நடந்தன.

அவமரியாதை

அவமரியாதை

விமானம் தரையில் விழுந்த இடத்தில் கிடந்த உடல்கள் தரையில் தர தரவென இழுத்துச் செல்லப்பட்டு அவமதிக்கப்பட்டுள்ளன.

பொருட்கள்

பொருட்கள்

பயணிகளின் உடைமைகள் மற்றும் ஏடிஎம் கார்டுகள் மற்றும் டெபிட் கார்டுகளை மீட்பு பணியில் ஈடுபட்ட ரஷ்ய ஆதரவுப் படை தீவிரவாதிகள் திருடியுள்ளனர்.

டிரக்

டிரக்

சடலங்களை பைகளில் அள்ளிப் போட்டு அவற்றை டிரக்குகளில் வைத்து எடுத்துச் சென்றுள்ளனர். அந்த டிரக்குகளில் வைக்கப்படும் முன்பு பைகள் பல மணிநேரம் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

மார்க்

மார்க்

பயணிகளின் சடலங்கள் அவமதிக்கப்பட்டது மற்றும் அவர்களின் உடைமைகளை புகைப்படம் எடுத்து இணையதளத்தில் வெளியிட்டது ஆகியவற்றை பார்த்து நெதர்லாந்து பிரதமர் மார் ரட் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

நெதர்லாந்து

நெதர்லாந்து

மலேசிய விமானத்தில் பயணம் செய்தவர்களில் 193 பேர் நெதர்லாந்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The Netherlands' Prime Minister, Mark Rutte, expressed shock at the utter disrespect being shown to Malaysian Airlines' plane crash site near Ukraine border.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X