அதிகாலையிலேயே.. நேபாளத்தை அதிரவைத்த 2 நிலநடுக்கம்.. மக்கள் அலறியடித்து ஓட்டம்.. ஒரே பரபரப்பு
காத்மாண்டு: இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் இன்று அதிகாலை 2 முறை அடுத்தடுத்து ரிக்டர் அளவுகோலில் முறைகே 4.7, 5.3 என்ற அளவில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் பொதுமக்கள் அலறியடித்து வீட்டை விட்டு வெளியே ஓடிவந்த நிலையில் பரபரப்பு ஏற்பட்டது. அதேபால் நேபாளத்தை ஒட்டிய இந்தியாவின் உத்தரகாண்டிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்தியாவின் அண்டை நாடாக நேபாளம் உள்ளது. இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள நேபாளம் மிகச்சிறிய நாடாகும். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது 2.64 கோடி மக்கள் வசிப்பது தெரியவந்தது.
இந்த நாடு இந்தியா மற்றும் சீனாவுடன் எல்லையை பகிர்ந்து கொள்கிறது.நேபாளம் வடக்கில் சீனாவுடனும், தெற்கு, மேற்கு, கிழக்கு திசைகளில் இந்தியாவுடனும் எல்லையை பகிர்ந்து கொள்கிறது.

2 முறை நிலநடுக்கம்
நேபாளத்தில் உள்ள முக்கிய மாவட்டங்களில் பக்லுங் ஒன்று. இந்நிலையில் தான் இன்று அதிகாலை பக்லுங் மாவட்டத்தில் அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆதிகாரி சவுர் பகுதியில் முதலிலும், அடுத்த அரைமணிநேர இடைவெளியில் குங்கா பகுதியிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் வீடுகளில் இருந்த பாத்திரங்கள் உருண்டு விழுந்ததோடு, பொதுமக்கள் அலறியடித்து வீட்டை விட்டு வெளியே ஓடிவந்தனர்.

பயத்தில் மக்கள்
மேலும் பொதுமக்கள் அனைவரும் பொதுவெளியில் திரண்டனர். ஒரே நேரத்தில் பொதுவெளியில் திரண்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. மேலும் நிலநடுக்கம் நின்ற பிறகும் கூட பல பேர் வீடுகளுக்கு திரும்ப பயந்தனர். இதற்கிடையே இந்த நிலநடுக்கத்தை நேபாள் நாட்டின் நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் உறுதி செய்துள்ளது.

ரிக்டரில் பதிவான அளவு என்ன?
இந்த நிலநடுக்கம் குறித்து அந்த மையம் கூறுகையில், ‛‛பக்லுங் மாவட்டம் ஆதிகாரி சவுர் பகுதியை அதிகாலை 1.23 மணிக்கு முதலாவதாக நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.7 என்ற அளவில் பதிவானது. அதன்பிறகு பக்லுங்க் மாவட்டம் குங்காவை அதிகாலை 2.07 மணிக்கு மற்றொரு நிலநடுக்கம் தாக்கியது. இது ரிக்டரில் 5.3 என்ற அளவில் பதிவாகி உள்ளது'' என தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் காரணமாக நேபாளத்தில் உயிர்சேதம், பலி எதுவும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளன.

உத்தரகாண்டிலும் நிலநடுக்கம்
மேலும் இதேபோன்று நேபாளத்தின் ஒருபகுதி எல்லையை இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலம் பகிர்ந்து வரும் நிலையில் உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசியிலும் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன்படி அதிகாலை 2.19 மணிக்கு உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக அதிர்ஷ்டவசமாக எந்த சேதமும் ஏற்படவில்லை.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications