இபிஎல்எம் ஜே0555-57எபி.. புதுசா கண்டுபிடிச்சிருக்கிற ரொம்ப ரொம்ப குட்டி நட்சத்திரம் இதுதானாம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

லண்டன்: 'இபிஎல்எம் ஜே0555-57எபி' என்று அழைக்கப்படும் மிகச் சிறிய நட்சத்திரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பூமியில் இருந்து சுமார் 600 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கிறது இந்த குட்டி நட்சத்திரம். இது சனிக் கோளைவிட சற்று பெரியது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

குட்டி நட்சத்திரத்தை கண்டுபிடித்து அதனை 'இபிஎல்எம் ஜே0555-57எபி' என்று விஞ்ஞானிகள் அழைக்கின்றனர். இந்த அசத்தும் வேலையை செய்தது பிரிட்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகமும், அங்குள்ள வானியல் ஆய்வாளர்களும்தான்.

பார்ப்பதே சவால்

பார்ப்பதே சவால்

இந்த நட்சத்திரம், சனிக் கோளைவிட 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் மடங்கு சிறியதாக இருக்கிறதாம். இதனால் இதனை கண்டறிவது மிகப் பெரிய சவாலாக இருந்தது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

விஞ்ஞானிகள் பட்டபாடு

விஞ்ஞானிகள் பட்டபாடு

இதனால், இந்தக் குட்டி நட்சத்திரம் உண்மையிலேயே நட்சத்திரமா என்பதை உறுதி செய்ய விஞ்ஞானிகள் படாதபாடு பட்டிருக்கிறார்கள். அதனால் மேலதிக ஆய்வுகள் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது.

குளிர்ச்சி நட்சத்திரம்

குளிர்ச்சி நட்சத்திரம்

தொடர் ஆய்வின் மூலம் இது நட்சத்திரம்தான் என்பதை உறுதி செய்தனர் ஆராய்ச்சியாளர்கள். இது போன்ற குட்டியான, ஒளி குறைந்த, குளிர்ச்சியான நட்சத்திரங்கள் உயிர்கள் வாழ்வதற்கு ஏற்றவைகளாக இருக்கின்றனவாம்.

நீருக்கு சாத்தியம்

நீருக்கு சாத்தியம்

இந்த வகை நட்சத்திரங்களில் மிதமான சூழ்நிலை நிலவும் என்பதால் இதன் மேற்பரப்பில் நீர் இருப்பதற்கான சாத்தியக் கூறு அதிகம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஒளி கொண்ட நட்சரத்திரங்கள் அண்டத்தில் அதிகம் இருப்பதால் ஒளி குறைந்த இது போன்ற நட்சரத்திரங்களை கண்டுபிடிப்பது மிகவும் கடினம். இந்நிலையில் 'இபிஎல்எம் ஜே0555-57எபி' என்ற சிறிய நட்சத்திரத்தை கண்டுபிடித்துள்ளது அறிவியல் உலகில் வெகுவாக பாராட்டப்படுவதாக உள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Scientists have discovered the smallest star. It is slightly larger than Saturn.
Please Wait while comments are loading...