முடியலை.. டீ குடிப்பதை குறைங்க! பொருளாதார நெருக்கடியால் மக்களிடம் வேண்டுகோள் விடுத்த பாகிஸ்தான்!
இஸ்லாமாபாத்: ‛‛நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலவுவதால் டீ குறைப்பதை குறைக்க வேண்டும்'' என பாகிஸ்தான் நாட்டின் அமைச்சர் அசன் இக்பால் கூறினார்.
நமது நாட்டின் அண்டை நாடான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் நாட்டு மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் சிரமம் உள்ளது. இலங்கைக்கு இந்தியா தொடர்ந்நு உதவி செய்து வருகிறது.
இந்நிலையில் தான் இலங்கையை தொடர்ந்து இன்னொரு அண்டை நாடான பாகிஸ்தானும் கடும் பொருளாதார நெருக்கடியில் எதிர்கொள்கிறது. இந்த நாட்டில் பணவீக்கம் அதிகரிப்பதுடன், அந்நிய செலாவணி கையிருப்பு கரைந்து வருகிறது.

பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி
இதனால் பாகிஸ்தானும் பொருளாதார நெருக்கடியில் நிலையில் தான் உள்ளது. இதனால் நாட்டில் உள்ள பொருட்களின் விலைகள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. நிதி நிலைமை மோசமானதால் நிலைமையை சரிசெய்ய பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிப்பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டன. இதனால் பெட்ரோல், டீசல் விலை ரூ.200யை தாண்டியுள்ளன. மேலும், பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் கிடுகிடுவென உயர்ந்து வருகின்றன.

அந்நிய செலாவணி குறைவு
இதற்கிடையே தான் நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்துள்ளது. பிப்ரவரியில் பாகிஸ்தானின் அந்நிய செலாவணி கையிருப்பு சுமார் 16 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவில் இருந்தது. இது ஜூன் முதல் வாரத்தில் 10 பில்லியன் அமெரிக்க டாலராக குறைந்துள்ளது. அதாவது இரண்டு மாதத்துக்கு தேவையான பொருட்களின் இறக்குமதிக்கு மட்டுமே அந்நிய செலாவணி உள்ளது. இதனால் பாகிஸ்தான் பிற நாடுகளில் இருந்து பொருட்கள் இறக்குமதி செய்வதில் பிரச்சனையை சந்திக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் தான் பாகிஸ்தானில் உள்ள மக்கள், நாட்டின் பொருளாதாரத்தை நிலைநிறுத்த, அவர்கள் குடிக்கும் டீயின் அளவை குறைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

டீ குடிப்பதை குறையுங்க...
இதுகுறித்து திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் அசன் இக்பால் கூறுகையில், ‛‛கடனில் தேயிலையை இறக்குமதி செய்கிறோம். இதனால் தேயிலை பயன்பாட்டை குறைக்க வேண்டும். எனவே பொதுமக்கள் தினசரி குடிக்கும் டீயின் அளவை ஒன்று முதல் இரண்டு கப் வரை குறைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். மேலும் மின்சார சிக்கனம் முக்கியமானதாகும். இதனால் மின்சாரத்தை சேமிக்கும் வகையில் இரவு 8.30 மணிக்கு மேல் கடைகளை மூடலாம்'' என கூறியுள்ளார்.

தேயிலை இறக்குமதி எவ்வளவு?
உலகில் மிகப்பெரிய தேயிலை இறக்குமதியாளராக பாகிஸ்தான் உள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 600 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான தேயிலையை பாகிஸ்தான் இறக்குமதி செய்திருந்தது. இந்நிலையில் தான் தற்போது டீ குடிப்பதை குறைக்க வேண்டும் என அந்த நாட்டின் அமைச்சர் கூறியுள்ளார். அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்து வரும் நிலையில் நாட்டின் இறக்குமதி பொருட்களின் செலவுகளை குறைக்கவும், நாட்டின் நிதி நிலைமையை இயல்பாய் வைத்து கொள்ளவும் அமைச்சர் இவ்வாறு அறிவுறுத்தி உள்ளார்.

நெட்டிசன்கள் கேள்வி; அரசுக்கு சவால்
இருப்பினும் இந்த அறிவுரையை நெட்டிசன்கள் விமர்சனம் செய்கின்றனர். மேலும் சிலர் டீ குடிப்பதை குறைப்பதன் மூலம் நாட்டின் நிதிநிலை தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியுமா? என பலர் சந்தேக கேள்வி எழுப்பி உள்ளனர். பாகிஸ்தானில் சமீபத்தில் ஆட்சி மாற்றம் நடந்தது. ஏப்ரல் மாதம் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தோல்வியடைந்து பதவியை இழந்த நிலையில் எதிர்க்கட்சிகளை இணைத்து ஷேபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக பொறுப்பேற்றார். இவர் பொறுப்பேற்ற அடுத்த 2 மாதங்களிலேயே நாட்டில் பொருளாதார நெருக்கடி அதிகரிக்க துவங்கி உள்ளது. இது ஷேபாஸ் ஷெரீப் அரசுக்கு பெரும் சவாலாக உள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications