For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

39 முறை ஆம்புலன்ஸை வரவழைத்த தாத்தா.. சிசிடிவி காட்சிகளால் போலீஸ் அதிர்ச்சி!

Google Oneindia Tamil News

தைபை: சூப்பர் மார்க்கெட்டில் காய்கறி, மளிகை சாமான் வாங்குவதற்காக ஆம்புலன்ஸை இலவச டாக்ஸி போல் ஆண்டுக்கு 39 தடவை முதியவர் ஒருவர் பயன்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆம்புலன்ஸ் வாகனமானது அவசர தேவைக்காக பயன்படுத்துவது ஆகும். மருத்துவ உதவி தேவைப்படும் நேரத்தில் இந்த ஆம்புலன்ஸை அழைப்பதற்காக கொடுக்கப்பட்ட எண்ணிலிருந்து அழைத்தால் வீடு தேடி ஆம்புலன்ஸ் வந்து நம்மை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்.

இந்த ஆம்புலன்ஸ்கள் பிரசவத்திற்கு கூட பயன்படுத்தலாம். நிறைய பேருக்கு இந்த ஆம்புலன்ஸ்களில் கூட பிரசவம் நடந்துள்ளது. அவசர ஊர்தி என்பதால் எந்த சிக்னலிலும் நிற்க வேண்டிய அவசியம் இல்லை.

டெல்லி பாஜக பிரசார பேனரில் குடிசைவாசியாக தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகன் படம்- புதிய சர்ச்சைடெல்லி பாஜக பிரசார பேனரில் குடிசைவாசியாக தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகன் படம்- புதிய சர்ச்சை

ஆம்புலன்ஸ் சேவை

ஆம்புலன்ஸ் சேவை

இந்த ஆம்புலன்ஸ் சேவையை தைவான் நாட்டு தாத்தா ஒருவர் சூப்பர் மார்க்கெட் செல்ல பயன்படுத்தியுள்ளார். வாங் என்ற முதியவர் கடந்த ஆண்டு 39 தடவை ஆம்புலன்ஸை பயன்படுத்தியது மருத்துவமனையின் ஆவணங்கள் மூலம் தெரியவந்தது. ஒவ்வொரு முறையும் மருத்துவமனைக்கு வரும் அந்த முதியவர் எந்த பரிசோதனையையும் மேற்கொள்ளாமல் அந்த இடத்தைவிட்டு சென்றதும் தெரியவந்தது.

போலீஸார்

போலீஸார்

இதுகுறித்து காவல் துறையிடம் போலீஸார் மருத்துவமனை நிர்வாகம் புகார் கூறியது. இதையடுத்து மருத்துவமனையில் இருந்த கேமராவை ஆய்வு செய்த போது போலீஸாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் வரும் அந்த முதியவர், உள்ளே செல்வது போல் சென்று பின்னர் வெளியே வரும் காட்சிகள் பதிவாகியிருந்தன.

மருத்துவமனை வாயில்

மருத்துவமனை வாயில்

பின்னர் மருத்துவமனை வாயிலில் வைக்கப்பட்டிருந்த கேமராவை ஆய்வு செய்த போலீஸாருக்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது அவருக்கு தேவையான பொருட்கள் வாங்க அருகில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுக்கு அவர் போனதும் தெரியவந்தது. மருத்துவமனையிலிருந்து அவரது வீடு 200 மீட்டர் தூரத்தில்தான் இருக்கிறது.

கால் டாக்சி

கால் டாக்சி

எனினும் ஆட்டோ, கால் டாக்சி வைத்து செல்லாத இந்த முதியவர் ஒவ்வொரு முறையும் ஆம்புலன்ஸை அழைத்து மருத்துவமனைக்கு போவதும் அங்கிருந்து அருகில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்று பொருட்களை வாங்குவதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த முதியவரை அழைத்த போலீஸார் இது போல் மீண்டும் செய்தால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தனர். தைவானில் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு மக்கள் அவசர சிகிச்சைக்கு செல்ல இலவச ஆம்புலன்ஸ் வாகனத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் அதை இந்த முதியவர் தவறாக பயன்படுத்திவிட்டார்.

English summary
Elder man calls ambulance for 39 times in a year in Taiwan for going to super market.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X