For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சீன வெளியுறவுத்துறை அமைச்சருடன் சுஷ்மா சந்திப்பு.. பாக். குறித்த விவாதம்.. திடீர் திருப்பம்!

Google Oneindia Tamil News

Recommended Video

    தாக்குதல் பற்றி சீனாவுக்குப் போய் விளக்கிய சுஷ்மா- வீடியோ

    பெய்ஜிங்: சீன வெளியுறவுத்துறை அமைச்சருடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சந்திப்பு நடத்தி உள்ளார்.

    பாகிஸ்தான் மீது இந்திய விமானப்படை நேற்று தாக்குதல் நடத்தியது. எதிர்பாராத இந்த தாக்குதலில் 300 தீவிரவாதிகள் வரை பலியாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    External Affairs Minister Sushma meets her Chinese counterpart amidst attack in Pakistan

    விமானப்படை நடத்திய இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதிலடி கொடுத்து வருகிறது. இந்திய எல்லையை நோக்கி பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் எல்லையில் கடும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தற்போது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சீனா சென்று இருக்கிறார். 16வது இந்தியா - சீனா - ரஷ்யா வெளியுறவுத்துறை சந்திப்பில் கலந்து கொள்ள அவர் சீனா சென்றுள்ளார்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை சீன வெளியுறவுத்துறை அமைச்சருடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சந்திப்பு நடத்தி உள்ளார். சீனாவில் வாங் யீயை சந்தித்தார் சுஷ்மா சுவராஜ்.

    பாக். மீது இந்தியா தாக்குதல் நடத்தியதை அடுத்து இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது. பாகிஸ்தானுக்கு எதிராக சீனாவிடம் இந்திய தரப்பு பேச முடிவு எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இவர்கள் இதுகுறித்து விவாதம் செய்ததாகவும் கூறப்படுகிறது. அதேபோல் ரஷ்யாவிடமும் இந்தியா இதுகுறித்து முறையிட முடிவெடுத்துள்ளது என்கிறார்கள்.

    ஆசியாவில் பாகிஸ்தானை தனித்து விட வைக்கும் அளவிற்கு இந்தியா இந்த முன்னெடுப்பை எடுத்து வருகிறது. போர் வரும்பட்சத்தில் நாடுகள் அணி சேர வாய்ப்பு இருப்பதால் இந்தியா இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை கையாண்டு இருக்கிறது.

    English summary
    External Affairs Minister Sushma Swaraj meets her Chinese counterpart Wang Yi in Wuzhen amidst IAF attack in Pakistan.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X