"வாழைப்பழம்" தந்த ஷாக்.. இஃப்தார் நோன்பு வேற.. கோதுமை பாக்கெட்டுக்கு தவிக்கும் தள்ளாடும் பாகிஸ்தான்
கராச்சி: பாகிஸ்தான் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அந்நாட்டு மக்கள் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் மிகுந்த அவதிக்கு ஆளாகி உள்ளனர்.. தற்போது ரமலான் தொடங்கி உள்ள நிலையில், அங்குள்ள உணவுப்பொருட்களின் விலை கூடுதல் கலக்கத்தை தந்துவருகிறதாம்.
இதற்கு முன்பு எப்போதுமே இல்லாத அளவுக்கு பாகிஸ்தானில், கடுமையான உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது.. எனவே, பணவீக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை இந்த நாடு எதிர்கொண்டு வருகிறது..
கொரோனா தொற்று ஒருபக்கம், பெரு வெள்ளம் மறுபுறமும் என ஏற்கனவே இந்த நாடு நெருக்கடியில் உள்ள நிலையில், பொருளாதாரமும் அதலபாதாளத்துக்கு சென்றுவிட்டது.

டாலர்: மேலும், டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சியை சந்தித்து வருகிறது... இப்போது, ஒரு டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு ரூ.288 ஆக உள்ளது. இதனால் அங்கு பணவீக்கம் எகிறி கொண்டே வருகிறது.. கடந்த சில மாதங்களாகவே, உணவு பொருட்களின் விலை பாகிஸ்தானில் உச்சத்துக்கும் எகிறி வருகிறது.. ஒவ்வொரு உணவு பொருட்களின் விலை உயர்வையும் கண்டு மக்கள் கதிகலங்கி போயுள்ளனர்..
கோழியின் விலையில் 82.5 சதவீத உயர்வையும், முட்டையின் விலை 50 சதவீதம் வெங்காயத்தின் விலை 415 சதவீதம் என உயர்ந்தது.. ஒரு கிலோ சிக்கன் ரூ.650-700 ஆக உயர்ந்தது.. கோழிக்கறி விலை உயர்ந்துள்ள நிலையில், சிக்கன் யாரும் சாப்பிடாதீங்க, அது உடல் நலத்துக்கு நல்லது கிடையாது என்று மத்திய உணவுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் தாரிக் பஷீர் சீமா கருத்து தெரிவித்ததும்அப்போது சர்ச்சையை ஏற்படுத்தியது.. அசைவப் பிரியர்கள் ஒருபக்கம் டென்ஷனாகி விட்டனர் என்றாலும், ஒட்டுமொத்த மக்களையும் பாதித்து வருவது கோதுமைதான்..

பஞ்சாப் அரசாங்கம்: இன்றுவரை கோதுமை விவகாரம் பெரும் பிரச்சனையாகி வருகிறது.. காரணம், பாகிஸ்தான் மக்களின் முக்கிய உணவு கோதுமையாகும்.. ஆனால், அந்த கோதுமை மாவின் விலை உயர்ந்துவிட்டதால் கடுமையான அதிருப்தியில் மக்கள் விழிபிதுங்கி உள்ளனர்.. பாகிஸ்தான் அரசு மற்றும் பஞ்சாப் அரசாங்கங்களுக்கு இடையிலான மோதல் பாகிஸ்தானில் கோதுமை நெருக்கடிக்கு காரணம் என்றும் கூறப்படுகின்றன.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பேயே, கராச்சியில், ஒரு கிலோ கோதுமை மாவு ருபாய் 140 முதல் 160 வரை விற்கப்பட்டது.. மாவின் விலை அதிகரிப்பு, அதிக மின்சார செலவு மற்றும் எரிசக்தி பற்றாக்குறை போன்ற காரணங்களால் விலையை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக, வியாபாரிகள் சொல்கிறார்கள். எனவே, நாட்டின் பல பகுதிகளில் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மாவு பொட்டலங்களை அரசாங்கமே வழங்கி வருகிறது..

எனினும், தற்போது பாகிஸ்தான் மக்கள் ரமலான் மாதத்தை கொண்டாடி வரும் சூழலில், உணவுப் பொருட்களின் விலை இன்னும் அதிகரித்திருப்பது அவர்களை கவலையில் ஆழ்த்தி வருகிறது.. பொதுவாக ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் இஃப்தாரின்போது பழங்களை சாப்பிடுவார்கள். ஆனால் பழங்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது... ஒரு டஜன் வாழைப்பழம் ரூ.450-க்கும், ஒரு கிலோ ஆப்பிள் ரூ.400க்கும் விற்கப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன..
விலைவாசி உயர்வால் நடுத்தர மற்றும் கீழ்தட்டில் இருக்கும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்... அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் மிகவும் அவதிக்கு ஆளாகியும் உள்ளனர்.. கோதுமைக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் பல்வேறு மையங்கள் மூலம் இலவசமாக கோதுமை மாவு வினியோகிக்கப்பட்டு வருகிறது.. இதை வாங்க மக்கள் முண்டியடித்து கொண்டு செல்லும்போது கூட்டநெரிசல் ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ்வதும் தொடர்கதையாகி கொண்டிருக்கிறது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications