உலகம் முழுவதும் திடீரென முடங்கிய பேஸ்புக்.. இன்ஸ்டாகிராம்.. வாட்ஸ் அப்.. பயனாளிகள் அவதி
கலிபோர்னியா: உலகம் முழுவதும் கடந்த சில மணி நேரங்களாக வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக்கில் படஙகளை டவுன்லோடு செய்து பார்க்க முடியாத பிரச்னை ஏற்படுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.
தகவல் பறிமாற்றங்களின் உச்சபட்ச தொழில்நுட்பமாக திகழும் வாட்ஸ் அப், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்களும் பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமானவை. இவற்றில் கடந்த சிலமணி நேரமாக புகைப்படங்களை டவுன்லோடு செய்து பார்க்க இயலவில்லை என்று புகார்கள் வந்துள்ளன.

குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஸ்டோரிகள் அனுப்ப முடியவில்லை என்றும் புகைப்படங்களை பார்க்க முடியவில்லை என்றும் சுத்தமாக வேலை செய்யவில்லை என்றும் பல ஆயிரம் பயனார்கள் பேஸ்புக் நிறுவனத்திற்கு புகார் அளித்து வருகிறார்கள்.
அமெரிக்காவின் பிளோரிடா ஜார்ஜியா மகாணங்களிலும், இங்கிலாந்தின் லண்டன் மற்றும் ஜெர்மனின் பெர்லின் உள்ளிட்ட நகரங்களில் இன்ஸ்டாகிராம் பயனாளர்கள் புகார்கள் அளித்துள்ளார்கள்.
இதேபோல் தென் அமெரிக்காவின் சில பகுதிகளிலும் வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் செயல்படவில்லை என்று புகார்கள் வந்துள்ளன. இந்ததகவலை டவுன்டிடெக்டர் இணையதளம் தெரிவித்துள்ளது. இதனிடையே பேஸ்புக் இன்ஸ்டாகிராம் டவுன் ஆகிவிட்டதை குறிப்பிடும் வகையில் உலகம் முழுவதும் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. பேஸ்புக் நிறுவனம் உடனடியாக இதுபற்றி எந்த கருத்தும் இதுவரை தெரிவிக்கவில்லை. இதனிடையே இந்தியாவில் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்பின் வசதிகள் எதுவும் செயல்படவில்லை. இதேபோல் இன்ஸ்டாகிராமும் செயல்படவில்லை.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications