For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

''என்னை விட அழகா இருக்காளே... ஒரு வேளை அவ பேஸ்புக் பார்ப்பதில்லையோ...??''

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: பேஸ்புக்கில் தொடர்ந்து மூழ்கிக் கிடக்கும் இளம்பெண்களின் அழகு குறைவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

மனிதர்களின் ஆறாம் விரலாய் மாறிப் போன செல்போனில் இரண்டெனக் கலந்து விட்டது இணையம். இதனால் அதனைப் பயன்படுத்துபவர்கள் சுலபமாக சமூகவலைதளங்களைப் பயன் படுத்துகின்றனர்.

அதிலும் குறிப்பாக இளைஞர்கள் தங்களின் பொன்னான நேரத்தை நண்பர்களுடன் இணையத்தில் பேசுவதன் மூலம் செலவிடுகின்றனர். இதனால் நன்மைகள் இருக்குமளவுக்கு ஒருசில தீமைகளும் இருக்கிறது என எச்சரிக்கிறார்கள் ஆய்வாளர்கள்.

அதிலும் குறிப்பாக பேஸ்புக்கில் நேரம் செலவிடுவதற்கும் நமது தோற்றப் பொலிவுக்கும் தொடர்பு இருக்கிறது என்கிறார்கள் இவர்கள்.

ஆய்வு...

ஆய்வு...

பேஸ்புக் பயன்படுத்தும் பெண்களின் மனம் மற்றும் உடல் ஆரோக்கியம் குறித்து அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒன்று ஆய்வு மேற்கொண்டது. இது தொடர்பாக 881 பெண்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது.

அழகு சம்பந்தமான கேள்விகள்....

அழகு சம்பந்தமான கேள்விகள்....

அதில், சமூக வலைதளங்களில் பெண்கள் எவ்வளவு நேரம் செலவிடுகிறார்கள், உடற்பயிற்சி மேற்கொள்கிறார்களா என்பன உள்ளிட்ட அவர்கள் உருவம் பற்றிய கேள்விகள் கேட்கப்பட்டது.

எதிர்மறை எண்ணங்கள்...

எதிர்மறை எண்ணங்கள்...

அந்த ஆய்வின் மூலம் எப்போதும் பேஸ்புக்கில் ஸ்க்ரோல் செய்தபடி இருப்பவர்கள் மனத்தில் எதிர்மறை எண்ணங்கள் உருவாகின்றதாக தெரிய வந்துள்ளதாம்.

மற்றவர்களுடன் ஒப்பீடு....

மற்றவர்களுடன் ஒப்பீடு....

மேலும், தொடர்ந்து பேஸ்புக்கில் உலவிக்கொண்டே இருப்பவர்கள் தங்களது தோற்றத்தை மற்றவர்களுடன் அதிகமாக ஒப்பிடுகிறார்களாம். இதனால் அவர்கள் மனத்தில் அதிகமான எதிர்மறை எண்ணங்கள் உருவாகின்றனவாம்.

எடையை குறைக்கணும்...

எடையை குறைக்கணும்...

இதில் வேடிக்கை என்னவென்றால் உடம்பு மெலிய வேண்டும் என நினைக்கும் பெண்கள் அதிகம் பேஸ்புக்கில் நேரத்தைப் போக்குகிறார்களாம்.

மன வருத்தத்தில் பெண்கள்...

மன வருத்தத்தில் பெண்கள்...

இப்படி அதிக நேரத்தைச் சமூக வலைதளத்தில் போக்குவதாலேயே இவர்களின் தோற்றப் பொலிவு மங்கிவிடுகிறது. தோற்றம் சரியாக இல்லை என்று எண்ணி இவர்கள் மன வருத்தம் அடைகிறார்கள் எனத் தெரிவிக்கிறார்கள் ஆய்வாளர்கள்.

உருவத்தில் பெரிய மாற்றம்...

உருவத்தில் பெரிய மாற்றம்...

கல்லூரியில் படிக்கும் இளம் பெண்கள் நேரம் தவறி உண்பதற்கும் சமூக வலைதளங்களில் அதிக நேரம் செலவிடுவதற்கும் நேரிடையான தொடர்பு இல்லை. ஆனால் அதிக நேரம் இத்தகைய வலைதளங்களிலேயே மூழ்கிக் கிடப்பவர்களின் உருவத்தில் அதாவது தோற்றத்தில் பெரிய மாற்றம் ஏற்பட்டு விடுகிறது.

அழகை சிதைக்கும் சமூக வலைதளங்கள்....

அழகை சிதைக்கும் சமூக வலைதளங்கள்....

இதனால் உணவு உண்பதில் இவர்கள் கவனம் பதிவதில்லை. அது அவர்களது மனநிலையிலும் உடம்பிலும் ஆரோக்கியக் குறைவை உருவாக்குகிறது. ஆகவே பெண்களின் தோற்றத்தைப் பாழ்படுத்துதில் சமூக வலைதளங்கள் அதிகப் பங்காற்றுகின்றன என்கிறது அந்த ஆய்வு.

English summary
New research has found that the more time teenage girls spend on the social networking site, the more likely they are to suffer from low self-esteem and develop an eating disorder.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X