ஃபெட்னா 2017: தமிழ் குறும்படப் போட்டி முடிவுகள் வெளியீடு

Posted By:
Subscribe to Oneindia Tamil

மின்னசோட்டா: 30ம் தமிழ்ப்பேரவை விழா வட அமெரிக்கா மின்னசோட்டா மாகாணத்தில் உள்ள மினியாபொலிசு நகரில் தொடங்கி நடந்து வருகிறது. பேரவை விழாவில் நடத்தப்பட்ட தமிழ் குறும்படப் போட்டி முடிவுகள் இப்போது அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், தமிழ் குறும்படப் போட்டி முடிவுகளில், முதல் பரிசு 'திரள் ' குறும்பட இயக்குனர் குரு சுப்ரமணியம் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. முதல் பரிசாக 1000 டாலர்கள் வழங்கப்பட்டுள்ளது.

FeTNA 2017: Short film competition results declared by Federation of Tamil Sangams of North America

இரண்டாம் பரிசு 'பகல் நட்சத்திரம்' குறும்படம் வென்றுள்ளது. அதன் இயக்குனர் பிரவீன் ராஜனுக்கு டாலர்கள் 500 பரிசாக வழங்கப்பட்டுள்ளது. மூன்றாம் பரிசுக்கு இரண்டு குறும்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி மூன்றாம் பரிசு, 'சத்தமாக ஒரு நிசப்தம்' , 'பொழுது புலர்ந்தது' ஆகிய படங்களுக்கு வழங்கப்பட்டன. இயக்குனர்கள் ஜெய் சீனிவாசன், ஹரிகரன் சுவாமிநாதன் ஆகியோர் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் பெற்றனர்.

சிறப்பு பரிசுக்கு 3 குறும்படங்கள் தெரிவாகியுள்ளன. 'கறை கேட்டது', 'திமில்', 'சாத்திரம் ஏதுக்கடி' ஆகியவையே அந்தப் படங்கள். அவற்றின் இயக்குனர்கள் சூர்ய நாராயணன், பிரவீன் குமார், சேஷங் கல்வலா ஆகியோர் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் பெற்றுக் கொண்டனர்.

குறும்படப் போட்டி குறித்து பேரவை நிர்வாகத்தினர்,"எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி, எங்களோடு பணிபுரிந்த குறும்படக் குழுவினருக்கும், திரைப்பட இயக்குநர்கள் மிஸ்க்கின், சிம்பு தேவன், பேராசிரியர் சுவர்ணவேல் ஈஸ்வரன், மற்றும் போட்டியாளர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள்!" என்று குறிப்பிட்டுள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
FeTNA 2017: Short film competition results declared by Federation of Tamil Sangams of North America at minnesota.
Please Wait while comments are loading...