For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரூமேனியாவிலிருந்து 5 தமிழர்கள் உள்பட 219 இந்தியர்களுடன் மும்பை புறப்பட்ட முதல் மீட்பு விமானம்

Google Oneindia Tamil News

புக்காரெஸ்ட்: ரூமேனியா வின் புக்காரெஸ்ட்டில் இருந்து 5 தமிழர்கள் உள்பட 2190 இந்தியர்களுடன் ஏர் இந்தியாவின் முதல் மீட்பு விமானம் மும்பை புறப்பட்டது.

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த வியாழக்கிழமை ராணுவ நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன்படி வான் வழியாக உக்ரைன் விமான தளங்கள், ராணுவ தளங்களை ரஷ்யா தகர்த்தெறிந்தது.

 First flight from Romania to Mumbai

பதிலுக்கு ரஷ்யாவின் போர் விமானங்கள் உள்ளிட்டவைகளை உக்ரைன் சுட்டு வீழ்த்தியது. இந்த நிலையில் உக்ரைனில் இந்த போரால் சிக்கித் தவித்து வரும் பிற நாட்டினர் அவசர அவசரமாக வெளியேறி வருகிறார்கள். அந்த வகையில் உக்ரைனில் உள்ள ஆயிரக்கணக்கான இந்தியர்களை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

உக்ரைன் நாட்டில் வான்வழி முற்றிலும் மூடப்பட்டுவிட்டதால், தரை வழியாக அண்டை நாடுகளுக்கு சென்று அங்கிருந்து விமானம் மூலம் தாயகம் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க ஏர் இந்தியாவின் முதல் மீட்பு விமானம் ரூமானியாவுக்கு சென்றுள்ளது.

புக்காரெஸ்ட்டில் இருந்து 5 தமிழர்கள் உள்பட 219 இந்தியர்களுடன் இந்த முதல் மீட்பு விமானம் மும்பை புறப்பட்டது. இது ரூமேனியாவிலிருந்து மும்பைக்கு இன்று இரவு 9 மணிக்கு வருகை தரும். இந்த தகவல்களை வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ் ஜெயசங்கர் தெரிவித்தார்.

Recommended Video

    இங்க இருந்து எப்படி வெளியேறுவோம்னு தெரில.. உக்ரைனில் சிக்கித் தவிக்கும் கள்ளக்குறிச்சி மாணவி வீடியோ

    உக்ரைனிலிருந்து மாணவர்கள் தமிழகம் வருவதற்கான விமான செலவை தமிழக அரசே ஏற்கும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

    English summary
    The first flight to Mumbai with 219 Indians evacuated from Ukraine has taken off from Romania, says EAM Dr S Jaishankar.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X