For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆப்பிள் வரலாற்றில் முதல்முறை.. டிம் கூக் வெளியிட்ட புரோ மாடல்.. வந்தது ஐபோன் 11 புரோ & புரோமேக்ஸ்!

ஆப்பிள் நிறுவனம் முதல்முறையாக தனது ஐபோன் மாடல்களில் புரோ மாடல்களை வெளியிட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    டிம் கூக் வெளியிட்ட புரோ மாடல்.. வந்தது ஐபோன் 11 புரோ & புரோமேக்ஸ்!

    நியூயார்க்: ஆப்பிள் நிறுவனம் முதல்முறையாக தனது ஐபோன் மாடல்களில் புரோ மாடல்களை வெளியிட்டுள்ளது. ஆம் ஐபோன் 11 புரோ மற்றும் ஐபோன் 11 புரோ மேக்ஸ் ஆகிய மாடல்களை வெளியிட்டுள்ளது.

    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் வெளியீடு உலகையே வியக்க வைத்துள்ளது. அதிகமாக எப்போதும் இரண்டு போன்களை வெளியிட்டு பழகிய ஐபோன் தற்போது மூன்று போன்களை வெளியிட்டு இருக்கிறது. ஐபோன் 11 ஒருபக்கம் மக்களை பெரிய ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கி உள்ளது.

    First time in history: Apple release pro version, iPhone 11 Pro and Pro Max outs in the market

    இந்த நிலையில் முதல்முறையாக ஐபோன் நிறுவனம் புரோ வெர்ஷன்களை வெளியிட்டுள்ளது. ஐபோன் 11 புரோ மற்றும் ஐபோன் 11 புரோ மேக்ஸ் ஆகிய மாடல்களை வெளியிட்டுள்ளது. இரண்டின் சிறப்பம்சங்களை இங்கு பார்க்கலாம்.

    ஐபோன் 11 புரோ iOS v13.0 ஓஎஸ் கொண்டது. அதேபோல் இதில் ஹெக்ஸ்சா கோர் 2.49 ஜிஎச்இசட், டூயல் கோர், குவாட் கோர் புராசஸர் கொண்டது. அதேபோல் ஐபோன் 11 போலவே இது ஏ12 பயோனிக் சிப்செட் கொண்டது. இதில் 6 ஜிபி ரேம் இருக்கும். 128 ஜிபி மெமரி இருக்கும்.

    செல்பிக்கு பதில் ஸ்லோபி.. ஷாக்கிங் விலை.. கேமரா கிங்.. ஆன்ட்ராய்டை ஆட்டம் காண வைத்த ஐபோன் 11!செல்பிக்கு பதில் ஸ்லோபி.. ஷாக்கிங் விலை.. கேமரா கிங்.. ஆன்ட்ராய்டை ஆட்டம் காண வைத்த ஐபோன் 11!

    ஐபோன் 11 புரோவில் ஓஎல்இடி ஸ்கிரீன் இருக்கிறது. இது 1125*2436 ரேஸலூஷன் கொண்டது. அதேபோல் 463 பிக்சல் டென்சிட்டி கொண்டது. இதில் செல்பி கேமரா 12 எம்பி கொண்டது. பின்பக்கம் மூன்று கேமராக்கள் இருக்கும். மூன்றும் தலா 12 எம்பி கொண்டது. இதில் சூம், ஆட்டோ பிளாஸ், பேஸ் டிடெக்சன், டச் டூ போக்கஸ் உள்ளது.

    ஐபோன் 11 புரோவில் புத்தம் புதிய ஒளிபோபிக் கோட்டிங் கொண்டது. இதனால் இதில் ஸ்கிராட்ச் கொஞ்சம் கூட ஏற்படாது. அதேபோல் நிறமும் போகாது. எளிதில் அழுக்கடையது.. ஐபோன் 11 எச்டிஆர் வசதியுடன் டால்பி விஷன் மற்றும் டால்பி சப்தம் கொண்டது. இதில் எச்டிஆர்10 வசதியும் உள்ளது.

    அதேபோல் இதில் 3190 எம்ஏஎச் பேட்டரி கொண்டது.மேலும் வைஃபை, ப்ளூடூத். ஜிபிஎஸ் . வோல்ட், என்எப்சி உட்பட பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது.

    ஐபோன் 11 புரோ மேக்ஸ் இதே வசதிகளை கொண்டது. ஆனால் ஸ்க்ரீன் மற்றும் மாற்றம் பெற்றுள்ளது. அதன்படி ஐபோன் 11 புரோ மேக்ஸ் ஓஎல்இடி ஸ்கிரீன் இருக்கிறது. இது 1125*2436 ரேஸலூஷன் கொண்டது. அதேபோல் 463 பிக்சல் டென்சிட்டி கொண்டது.

    விலை:
    11 புரோ : $999, இந்தியாவில் 1.10 லட்சம் ரூபாய் வரை வரும்.
    11 புரோ மேக்ஸ் : $1099, இந்தியாவில் 1.20 லட்சம் ரூபாய் வரை வரும்.

    English summary
    First time in history: Apple release pro version, iPhone 11 Pro and Pro Max outs in the market in an unexpected rate.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X