இங்கிலாந்தில் இனி எல்லோருமே வீட்டிலிருந்து வேலை பார்க்கலாம்- புதிய அறிவிப்பு
லண்டன்: இங்கிலாந்தில் இனி எல்லா ஊழியர்களுக்குமே வீட்டிலிருந்து வேலை பார்க்கும் வசதியானது வழங்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் இதுநாள்வரை பெற்றோர்களும், குடும்பத்தினரை கவனித்துக்கொள்ள வேண்டிய கடமையைக் கொண்டிருந்தவர்களும் மட்டுமே வீட்டிலிருந்து வேலை போன்ற சிறப்பு சலுகைகளைப் பெற்று வந்தனர்.
இந்தத் தகுதி அடிப்படையில் கிட்டத்தட்ட 10 மில்லியன் ஊழியர்கள் தங்களின் வேலை நேரங்களில் சலுகைகளைப் பெற்றுவந்தனர்.

தளர்த்தப்பட்ட விதிமுறைகள்:
ஆனால், இன்றுமுதல் அங்கு நடைமுறைக்கு வந்துள்ள புதிய எளிதாக்கப்பட்ட வேலை நேர விதிகளின்படி நாடு முழுவதிலும் உள்ள 20 மில்லியன் ஊழியர்கள் இத்தகைய சலுகைகளைப் பெறும் வாய்ப்பு அமைந்துள்ளது. இவர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்வது உட்பட பல வசதிகளைப் பெறமுடியும்.

உத்வேகம் அதிகரிக்கும்:
தங்களுடைய ஊழியர்களின் உத்வேகத்தையும், உற்பத்தித் திறனையும் இந்த புதிய நடைமுறைகள் அதிகரிக்கும் என்பதால் அவர்கள் பணியிலிருந்து விலகமாட்டார்கள் என்று முதலாளிகள் கருதுகின்றனர்.

பொருளாதார மேம்பாடு:
மேலும், நாட்டின் பொருளாதாரமும் இதன்மூலம் அதிக அளவில் மேம்படும் என்றும் கருதுகின்றனர். இதனால் ஆட்சேர்ப்பு செலவுகள் குறையும்.

மேம்படும் மனித வளம்:
இது உண்மையிலேயே வெற்றி பெறக்கூடிய சூழலை உருவாக்கக்கூடும், மனித வளமும் மேம்படும் என்று அந்நாட்டின் வேலை உறவுகள் தொடர்பான அமைச்சர் ஜோ ஸ்வின்சன் கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications