ஐ.நா. கோரிக்கை நிராகரிப்பு- முன்னாள் விடுதலை புலி சாந்தரூபனை இலங்கைக்கு நாடு கடத்தும் ஆஸி.

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிட்னி: ஐக்கிய நாடுகள் சபையின் கோரிக்கையை நிராகரித்து விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினரான சாந்தரூபனை இலங்கைக்கு ஆஸ்திரேலியா வரும் 22-ந் தேதி நாடு கடத்துகிறது.

இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு அகதியாக சென்றவர் சாந்தரூபன். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கடற்புலிகள் பிரிவில் படகுகள் கட்டுமான பிரிவில் முக்கிய பொறுப்பாளராக இருந்தார்.

Former LTTE cadre to be deported from Australia

ஆஸ்திரேலியாவில் சாந்தரூபன் கைது செய்யப்பட்டு தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளார். தம்மை அகதியாக ஏற்குமாறு சாந்தரூபன் விடுத்திருந்த கோரிக்கையை ஆஸ்திரேலியா நிராகரித்தது.,

இதையடுத்து சாந்தரூபனை இலங்கைக்குநாடு கடத்தக் கூடாது; அவரது உயிருக்கு ஆபத்து உள்ளது என ஐநா அகதிகள் ஆணையம் ஆஸ்திரேலியாவுக்கு கோரிக்கை விடுத்திருந்தது. இந்த கோரிக்கையை ஆஸ்திரேலியா நிராகரித்துவிட்டது.

சாந்தரூபனை வரும் 22-ந் தேதி இலங்கைக்கு நாடு கடத்த முடிவு செய்துள்ளது ஆஸ்திரேலியா.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The Australian government will deport a former LTTE cadre to Sri Lanka on Feb. 22

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற