டிவி விவாத நேரலையில் “காரி துப்பிய பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் ” பரவும் வீடியோ. .நெட்டிசன்கள் கேலி

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமபாத்: பாகிஸ்தனில் டிவி நிகழ்ச்சி விவாதத்தின் போது முன்னாள் அமைச்சர் ஒருவர் கோபத்தில் எச்சிலை காரி துப்பும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

விவாதம் நடத்தாத செய்தி சேனல்களே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவுக்கு உள்ளூர் சேனல்கள் முதல் சர்வதேச ஊடகங்கள் வரை விவாத நிகழ்ச்சிகள் மிகவும் பிரபலம் ஆனதாக உள்ளது.
மக்கள் மத்தியிலும் இதற்கு நல்ல வரவேற்பு இருப்பதால், பிரைம் டைம்களில் செய்தி சேனல்களில் இத்தகைய விவாத நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

ஊடகங்களில் விவாத நிகழ்ச்சி

ஊடகங்களில் விவாத நிகழ்ச்சி

உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல் வரை துவைத்து தொங்கவிடப்படும் இத்தகைய விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரபலங்களும் விருந்தினர்களும், தங்கள் கருத்துக்களை ஆக்ரோஷமாக தெறிக்க விடுவார்கள். இதில் சில சமயம் எல்லை மீறிய சம்பவங்களும் அவ்வப்போது நடப்பதுண்டு. சில சமயம் விருந்தினர்களாக வந்தவர்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்வது, அங்கிருக்கும் பொருட்களை உடைப்பது, ஆவேசமாக பேசிவிட்டு விவாதத்தில் இருந்து வெளியேறுவது என அவ்வப்போது நடைபெறும் சம்பவங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி டிரெண்ட் ஆகும்.

எச்சிலை துப்பினார்

எச்சிலை துப்பினார்

அந்த வகையில், தற்போது பாகிஸ்தானில் டிவி விவாதத்தில் பங்கேற்ற ஒருவர் ஆவேசமாக பேசிக்கொண்டு இருந்த போது எச்சிலை காரித்துப்பி விவாதத்தை சூடாக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி விமர்சனத்தையும், கேலியையும் ஒருசேர கிளப்பி வருகிறது. இதில், இப்படி ஆவேசமாக பேசி அநாகரிமாக நடந்து கொண்டது பாகிஸ்தானின் ஒரு முன்னாள் அமைச்சர் என்பதுதான் சமூக வலைத்தளங்களில் அதிகம் விவாதத்திற்கு உள்ளாவதற்கு ஒரு முக்கிய காரணமாகும். பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் ரானா சனாவுல்லா குறித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஷேக் ராஷித் அஹ்மத் ஒருகட்டத்தில் ஆவேசம் அடைந்தார்.

இப்படி நடந்து கொள்ளக்கூடாது

இப்படி நடந்து கொள்ளக்கூடாது

தொடர்ந்து காரித்துப்பியபடி பேசியது விவாதத்தில் பங்கேற்றிருந்த சக விருந்தினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காணொலி வாயிலாக விவாதத்தில் பங்கேற்றிருந்த முன்னாள் அமைச்சர் நடந்து கொண்ட விதம் அனைவரையும் முகம் சுழிக்க வைத்தது. இந்த வீடியோவிற்கு கீழே பதிவிட்டுள்ள நெட்டிசன்கள், முன்னாள் அமைச்சருக்கு நேரலையின் போது காரித்துப்பும் துறை என்ற ஒன்றை உருவாக்கி அதற்கு அமைச்சராக்கலாம் என கேலியாக பதிவிட்டுள்ளனர். அதேபோல், பொறுப்பு மிக்க பதவியில் இருந்த நபர் இப்படி நடந்து கொள்ளக்கூடாது எனவும் நெட்டிசன்கள் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

முன்னாள் உள்துறை அமைச்சர்

முன்னாள் உள்துறை அமைச்சர்

மேலும் சில நெட்டிசன்கள் கூறுகையில், நல்ல வேளை அவர் டிவி அலுவலகத்திற்கு வரவில்லை. வந்திருந்தால் அலுவலகம் அசுத்தமாகி இருக்கும் என்றும் கேலியாக சாடியுள்ளனர். பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக ஷேக் ராஷீத் அகமது பொறுப்பு வகித்திருக்கிறார். 2020-22 ஆம் ஆண்டு வரையில் பாகிஸ்தானின் உள்துறை அமைச்சராக இருந்த இவர் தற்போதைய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆட்சி குறித்து விமர்சித்து தொடர்ந்து தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொண்டு வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+