இஸ்ரோவின் கனவு திட்டம் ககன்யான்.. 4 வீரர்கள் மீண்டும் ரஷ்யா பயணம்.. இம்முறை இந்த ஸ்பெஷல் பணிக்கு!
மாஸ்கோ: மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டமான ககன்யான் திட்டத்தில் பயன்படுத்தக் கூடிய விண்வெளி உடையை வடிவமைப்பதற்கு 4 இந்தியா வீரர்கள் வரும் செப்டம்பர் மாதம் ரஷ்யா செல்லவுள்ளனர். இதன் மூலம் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் கனவு நெருங்கி வருகிறது.
கடந்த பல ஆண்டுகளாகவே இஸ்ரோ தொடர்ந்து பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகின்றன. விண்கலங்களை விண்வெளிக்கு அனுப்ப அமெரிக்கா, ஜெர்மனி என பல்வேறு உலக நாடுகளும்கூட இந்தியாவையே நாடுகின்றன.
இந்நிலையில், அடுத்தகட்டமாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்திற்கு இஸ்ரோ தயாராகி வருகிறது. இதுவரை அமெரிக்கா, ரஷ்யா, சீன ஆகிய நாடுகள் மட்டுமே விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பியுள்ளது. இந்த வரிசையில் இந்தியாவும் விரைவில் இடம் பெறப்போகிறது. இதற்காகத் தான் புதிய திட்டத்தின் ஆய்வுகளை இஸ்ரோ செயல்படுத்தி வருகிறது.

ககன்யான் திட்டம்
சுமார் ரூ 10 ஆயிரம் கோடி செலவில் உருவாகப்பட்டும் இத்திட்டத்திற்கு ககன்யான் என பெயரிடப்பட்டுள்ளது. ஜி.எஸ்.எல்.வி. மார்க் - 3 ராக்கெட் பூமியின் தாழ் வட்டப்பாதைக்கு மனிதர்களை அனுப்பி, அவர்களை மீண்டும் பாதுகாப்பாக அழைத்து வருவது தான் இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம். இதற்காக இந்திய விமானப் படையில் இருந்து விமானிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். விண்வெளி பயணத்திற்குத் தயாராகும் வகையில் அவர்கள் ரஷ்யாவுக்குச் சென்று சிறப்புப் பயிற்சி பெற்றனர். இந்த பயிற்சிக்காக இந்தியாவும் ரஷ்யாவும் கடந்த 2019 ஜூன் 17ஆம் தேதி சிறப்பு ஒப்பந்தத்தை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் ரஷ்யா
இந்நிலையில், இத்திட்டத்தில் பயன்படுத்த வேண்டிய விண்வெளி உடையை வடிவமைப்பதற்கு 4 இந்தியா வீரர்கள் வரும் செப்டம்பர் மாதம் ரஷ்யா செல்லவுள்ளதாக ரஷ்யாவுக்கான இந்திய தூதர் வெங்கடேஷ வர்மா தெரிவித்துள்ளனர்.இது குறித்து அவர் கூறுகையில், "விண்வெளி செல்லும் வீரர்கள் ரஷ்யாவில் பயிற்சி பெற்று, இப்போது தாயகம் திரும்பியுள்ளனர். மிக முக்கியமான ஒரு பணிக்காக வரும் செப்டம்பர் மாதம் அவர்கள் மீண்டும் ரஷ்யா செல்லவுள்ளனர்.

spacesuits
விண்வெளிக்குச் செல்லும் வீரர்களின் spacesuits எனப்படும் சிறப்பு உடைகள் ரஷ்யாவில் தான் தைக்கப்படுகின்றன. அதற்கான அளவுகளைக் கொடுக்க அவர்கள் மீண்டும் மாஸ்கோவிற்கு செல்லவுள்ளனர்" என்று அவர் கூறினார். இந்தத் திட்டத்திற்காக இந்திய விமானப் படையை சேர்ந்த மூன்று விமானிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், இந்தியா சார்பில் விண்வெளிக்குச் செல்லும் அந்த மூன்று பேர் யார் என்பது குறித்து இதுவரை அறிவிக்கப்படவில்லை.

ககன்யான் திட்டம் பற்றி
அடுத்தாண்டு இறுதிக்குள் இந்த ககன்யான் திட்டம் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விண்வெளிக்குச் செல்லும் 3 இந்திய வீரர்கள் 5 முதல் 7 நாட்களுக்கு விண்வெளியில் இருப்பார்கள். இத்திட்டத்திற்காக தற்போது இந்திய விமானப் படையைச் சேர்ந்த 4 விமானிகள் பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்களில் மூவர் விண்வெளிக்குச் செல்லவுள்ளனர். இந்தாண்டு ரஷ்யாவில் ஜி-ஃபோர்ஸ், ஹைபோக்ஸியா மற்றும் குறைந்த அழுத்தத்தைக் கையாள்வது ஆகிய பயிற்சிகள் இந்தியா விமானிகளுக்கு அளிக்கப்பட்டது. முன்னதாக, கடந்த சில நாட்களுக்கு முன் நெல்லை மாவட்டம், மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் சர்வீஸ் மாடலில் உள்ள திரவ எரிபொருள் முதற்கட்ட சோதனை வெற்றிகரமா நடந்து முடிந்தது.












Click it and Unblock the Notifications