For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காஸாவில் இருந்து சர்வதேச பத்திரிகையாளர்கள் இஸ்ரேலால் வெளியேற்றம்!

By Mathi
Google Oneindia Tamil News

காஸா: பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இருந்து சர்வதேச பத்திரிகையாளர்கள் இஸ்ரேலால் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இஸ்ரேல் கள நிலவரம்:

பாலஸ்தீனத்தின் காஸா பிராந்தியத்தின் மீது ரசாயன குண்டுகளை கொத்து கொத்தாக வீசி வருகிறது இஸ்ரேல். அங்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்தை தொட இருக்கிறது.

பல்லாயிரக்கணக்கானோர் படுகாயமடைந்தும் அகதிகளாகவும் இடம்பெயர்ந்து வருகின்றனர். அங்கு போர்க் காட்சிகளை எந்த ஒரு ஊடகமும் பதிவு செய்யக் கூடாது என்று இஸ்ரேல் பகிரங்க மிரட்டல் விடுத்திருந்தது.

காஸாவில் ஊடகங்கள் நிலைமை

- போர்க்காட்சிகளை வெளியிட்ட அல் ஜசீரா தொலைக்காட்சியை தடை செய்யப் போவதாக இஸ்ரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை விடுத்திருந்தார்.

- போர்க்களத்தை படம்பிடித்துக் கொண்டிருந்த ஊடகவியாளர் ஒருவர் குண்டுவீச்சில் பலியானார்.

- பிபிசி நிறுவனத்தின் அரபி செய்தியாளர் ஒருவர் குண்டுவீச்சில் படுகாயமடைந்தார்.

- சிறிது நேரத்துக்கு முன்பாக வேறுவழியின்றி காஸா நகரில் இருந்து ஊடகவியலாளர்கள் வெளியேற்றப்பட்டுவிட்டதாக சேனல் 4 செய்தியாளர் ஜோனாதன் மில்லர் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

- மேலும் காஸாவுக்குள் நுழைவதற்கான ஹாஸின் சோதனை சாவடி கைவிடப்பட்ட நிலையில் இருப்பதையும்ஜோனாதன் மில்லர் பதிவு செய்துள்ளார்.

English summary
Journalists are coming under increased pressure in the Gaza Strip while reporting on a highly sensitive, divisive and polarised conflict. Some journos left from the War zone.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X